காதல்

அந்த இரவுப் பொழுதில்
இரு ஜீவன் வழியில்
நனைந்து கொண்டது
அந்த காதல் மழையில்!

இன்று எத்தனை தயக்கம்
இன்னும் கண்ணில் மயக்கம்
பார்த்துக் கொண்டே
காதல் இதயம் துளைக்கும்!

அந்த நீண்ட பாதையில்
மனம் அங்கே தொலைகையில்
நின்று கொள்கிறேன்
அவள் புன்னகை வருகையில்!

இந்த ஜாம நிலவிலே
நம் காதல் விழியிலே
எத்தனை கனவுகள்
இந்த நிலவின் ஔியிலே!

நீ இப்படி பார்த்ததில்
மனம் குப்புனு வேர்த்ததில்
உறைந்து போகிறேன்
இந்த தேவதை ஈர்த்ததில்!

நான் கொஞ்சம் இருக்கவா?
நான் கொஞ்சம் விலகவா?
நெருங்கி சொல்லடி
நான் உன்னில் உறையவா?

எழுதியவர் : (11-May-17, 7:39 am)
சேர்த்தது : Ijaz R Ijas
Tanglish : kaadhal
பார்வை : 110

மேலே