மீண்டும் முதலிலிருந்து
ஒரு நாகரீகம் பழகியிராத
ஆதி மனிதனின்
நாட்களை தன்னுள் கொண்டு
எங்கெங்கும் கரும்பச்சை தீட்டுகிறது
நவீன கத்தரியின் வெட்டுகளில்
முரண்பட்டு இலைக் குறைப்பின்றி
செம்பூக்களில் மண்ணுயிர்ப்பிக்கிறது
நெருக்கங்களால் ஆரத்தழுவுதலால்
அலைமோதும் விகற்பம்
சிறிதுமின்றி
தென்றலின் குளுமையில்
மகரந்தம் கோர்க்கிறது
இனியொரு தோன்றலும்
யுகம் கடந்து யுகம் காண
காடு திறந்தே
வர வேண்டும்
கொஞ்சம் மகரந்தங்களையும்
முளை வெட்டப்படாத
சிறு நெல்மணியையும்
இக்கந்தக பூமியில்
எங்கேனும் மறைத்து வைப்போம்
டார்வினின் பரிணாம வளர்ச்சியில் பங்கேற்கட்டும் அவை