என் அப்பா
என் அப்பா
என் முதல் குரல் கேட்டு,
கர்வத்துடன் கனவு
கண்டவர் என் அப்பா !
என் புன்னகை பூப்படைந்தன்று,
தன் கண்ணீரால் ஆயிரம் கவிதை
சொன்னவர் என் அப்பா !
என் பாதங்கள் பூமி தொடும் சோதனை அன்று,
தன் விழி மொழியால்
கட்டளையிட்டவர் என் அப்பா !
என் விழி மூட மறுத்த போது,
தன் மார்பை தலையணையாக்கி,
தம் அறிந்த மொழிகளை
தாலாட்டாக்கியவர் என் அப்பா !
கூட்டத்தின் பிணையில்,
பிணி தொற்றும் என,
தன் தோளில் உயர்த்தி
நகர்வலம் வந்தவர் என் அப்பா !
நான் பேசிய முதல் மழலைத் தமிழே,
தான் கேட்ட ஆகச்சிறந்த
கவிதை என கொக்கரித்தவர் என் அப்பா !
நான் பள்ளியில் பயின்ற
உயிர்ரெழுத்தை நான் கூற,
ஓராயிரம் முறை செவிமடுந்து
ஸ்வரம் அமைத்தவர் என் அப்பா !
நான் சகதியோடும், புழுதியோடும் போர்த்தொடுத்த போது
என் வீரம் கண்டு தன்னைத்தானே
கோழையாக்கிக் கொண்டவர் என் அப்பா!
என் குரல்வளை உடைந்த அன்று
என் சப்தம் அறிய,
தன் குரலை நிசப்தப்படுத்திக்
கொண்டவர் என் அப்பா !
என் வாழ்க்கைகாக
வங்கியின் படி ஏறியபோது,
அதை மறுத்து தன் உறக்கம்
மறந்தவர் என் அப்பா !
என் அறநெறியில்
வழிதவறிய போது,
சக தோழனாய் என்மீது
சாடியவர் என் அப்பா!
நான் ஒரு பிழை
என எண்ணியபோதெல்லாம்,
நம்பிக்கையைக் கொண்டு
என் எண்ணத்தை திருத்தியவர் என் அப்பா!
தன் ஆசைகளை கனவாக்கிக் கொண்டு,
என் கனவுகளை ஆசையாய்
சுமந்த ஒர் உயிர் என் அப்பா !
என் உணர்வுகளுக்கு இன்றுவரை
உயிரோட்டம் தருகின்ற ஒரே ஜீவன்
என் அப்பா !!!!!!!
அன்புள்ள மகன்
தௌபீஃக்