இறுதிநடை...
என் நடையழகை பார்த்து சந்தோசப்பட்டு என் நடையின் வேகத்தைக் குறைக்க சொல்லி நிதானமாக நடக்க சொன்னவர் அவர்...ஆனால் நான் நிதானித்து நடந்த போது அவர் என்னை கண்காணிக்காமல் முன்னே செல்கிறார்...ஆம் அந்த நிதானமான நடை பெரிய சுமை தூக்கி வலியுடன் கூடிய நடை...அது இழப்பின் நடை....வைக்கும் ஒவ்வொரு அடியிலும் இழந்து கொண்டிருக்கும் தன்னம்பிக்கையின் கண்ணீர் நடை...என் தந்தை கைபிடிக்காமல் நான் தந்தையுடன் கண்ணீரில் பேசி நடக்கும் தந்தையுடன் பயணிக்கும் கடைசி பயணம்....அது...இறுதி நடை....அதித வலிகள் கொண்டவை....இதயத்தில் சுமந்தவரை...தோலில் சுமந்தபடி...மயானத்திற்க்கு...!!!!!