வாழ்க்கை போராட்டம்

தனக்காக வாழ்வது இயல்பு
மற்றவர்களுக்காக வாழ்ந்து
பார் உன்னை உனக்கே பிடிக்கும்...

மனதுக்கும் மூளைக்கும் ஒரு
போராட்டம்... அதுவே பாசத்துக்கும்
பணத்துக்கும் நடக்கும் போர்...
மூளை கொண்டு பணத்தை
வெல்லு... மனதை கொண்டு
பாசத்தை வெல்லு...

இரண்டையும் ஒன்றாய்
எண்ணாதே... இடம் மாற்றாதே...
மாறினால் பாசத்திடம் பணத்தை
எதிர்பார்க்கும்... பணத்தின்
மேல் பாசம் கொள்ளும்...
வாழ்வே நரகமாகிடும்...

வாழ்வே நரகம் நரகம்
என்று பலர் புலம்பினாலும்...
ஒரு சிலர் அதுவே
சொர்கம் என்றே கூறுவதும்
உண்டு... உண்மை நம்
கையில்... வாழ்க நலமுடன்...

எழுதியவர் : பவநி (15-May-17, 8:23 am)
Tanglish : vaazhkkai porattam
பார்வை : 247

மேலே