இதயத்தின் ஆழத்தில்

நாம் படித்த
கல்லூரி சாலையை
கடந்த போது ...
வரலாற்று வாத்தியார்
வகுப்பறையில் என்னை
வசை பாடியது
நினைவுக்கு வரவில்லை ...
தேர்வறையில்
தெரியாத வினாவிற்கு
திரும்பி பார்த்து விடை எழுதியது
நினைவுக்கு வரவில்லை ...
நண்பர்கள் எல்லாம்
மட்டம் அடித்து ஊரை
வட்டம் அடித்தது
நினைவுக்கு வரவில்லை ...
உன்னிடம்
காதல் சொல்ல
தயங்கி நின்ற
தருணம் மட்டும்
நினைவின் நெருப்பாய்
முதலில் முட்டி நின்றது ...
என்
இதயத்தின் ஆழத்தில்
இன்னுமா இருக்கிறாய் நீ ?....