இதயம்

"நண்பர் முகம்மது சர்பான் அவரது எண்ணச் சுடரும் வண்ணக் கவியும் பக்கத்தில் பதிவிட்டது"வண்ணம் குறையாத கனவுகளின் அரங்கம்
எண்ண முடியாத நினைவுகளின் சுரங்கம்

இன்பத்தில் வாங்கும் வருடல் சுகமாய்
துன்பத்தில் தாங்கும் வருடல் நகமாய்

மருந்து போடாத காயங்கள் ஆயிரம்
அரும்பும் பூவாக மாயங்கள் செய்திடும்

உணர்வுகளின் உரசலில் உயிரோடு சிரிக்கும்
உறவுகளின் விரிசலில் உயிர்போக மரிக்கும்

விரிந்து சுருங்குவதால் நீ துடிக்கின்றாயோ?...
பிரிந்து வருந்துவதால் நீ துடிக்கின்றாயோ?...

கனவும் காற்றாகி நினைவும் மூச்சாகி
உயிர்வாழ உறங்காமல் நீயும் துடிக்கின்றாய்......

எழுதியவர் : இதயம் விஜய் (17-May-17, 12:08 pm)
Tanglish : ithayam
பார்வை : 492

மேலே