தூக்கு கைதியின் நிறைவு இரவு
என்னை கடந்த இரவுகளை
ரசிக்க மறந்த நெஞ்சம்
இன்றைய என் கடைசி இரவை
முழுதும் ருசிக்காமல் விடப்போவது இல்லை
காதலின் ஒர புன்னகையாய்
விரிந்தது பிறை நிலவு
வண்டுகளின் இறுதி ரீங்காரதோடு
மயான அமைதி ஆனது நடு இரவு
நிலவோடு இணைந்து வின்மீனும் ஒளி வீச
அதன் இறுதி பதிவு என் கண்ணில் ........
அன்னை கருவின் சுகம் என
என் இறுதி இரவு இதமாய் போகுது
சொல்லக்கூடாத ---- வார்த்தைகள்
சொல்லிய ---- விதம்
சேரக்கூடாத --- இடம்
சேர்ந்து கொண்ட --- நேரம்
என எல்லாம் புரட்டுகிறேன் புரண்டுவிட்ட இந்நேரத்தில் ............
ஏதொரு சலனமும் இல்லை
எவரும் அறியா இறப்பை
நாளை எனக்கு உறுதி என்று அறிந்த திமிரில்
இமை மூடாமல் இளிக்கிறேன் இன்னும் இருக்கும் நாழிகையை எண்ணிக்கொண்டு ...........