கிறுக்கியின் கிறுக்கல்கள் - 03

நின் கருவிழிகள் தீண்டா
பூவனமும், பெண்மனமும்
#பாலைவனமாய்

நின் இதழ் கள் குடித்தே
மிளிர்கிறது
#உன்_முத்துப்பற்கள்

என் கவிதைக்கு
கருவாகி விட்டது
நின் கன்னம் தீண்டிய
#கட்டெறும்பு

நீ விரும்பி நெருங்க
விழித்தெழுகிறது
#வெட்கம்

உன் மோக முள்
கிழித்தே சிதைகிறது
#என்_தேக_நாணம்

சித்தமெல்லாம்
சத்தமிட்டே துயில்கிறது
பித்தம் கொண்டு
#நீ_முத்தம் கேட்கையில்..!

உன்னிடமிருந்து அனுதினமும்
பறித்துக்கொண்டுதான் போகிறேன்
ஆனாலும் வளர்ந்துகொண்டே வருகிறது
#நம்பிக்கை

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (18-May-17, 5:00 pm)
பார்வை : 464

மேலே