அரங்கம் மயங்கவே அவன் வந்தான்

திரண்ட தோள்கள் திடமான கரங்கள்
அகன்ற நெஞ்சு அழகான மூக்கு
கருணைக் கண்கள் கலையாத கேசம்
அழகுச் சிரிப்பு அளவான நெற்றி
களையான முகம் கத்திரித்த தாடி
ஆஜானு பாகுவான ஆண்மைத் தோற்றம்

அழகுக் குன்று அரங்கம் வந்தது
அழைப்பு க்காக அங்கே நின்றது
அமுதமாய்ப் பேசி அரங்கை வென்றது
விகடமாய்ப் பேசி வெற்றி கொண்டது

அரங்கில் இருந்த அரிவையர் கண்கள்
அவனைப் பருகி தாகம் தீர்த்தன
இதயம் யாவும் எழுந்து வந்தவன்
இருக்கும் இடம் இணைய மொய்த்தன

பேச்சை முடித்து பேரழகன் சென்றான்
நிசப்தம் அங்கே நிலை கொண்டது
அவன் மறைந்தான் விட்டுச் சென்ற
தாக்கம் விலக நாழி ஆனது

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (18-May-17, 4:54 pm)
பார்வை : 116

மேலே