ஆசைக்கனவுகள்

வண்ணக்காகிதங்களில் வகைவகையாய் காகிதக்கப்பல்கள்
சிறு வாய்க்கால் தாண்டும் முன்னே கவிழ்ந்துவிடும்
கவிழ்ந்த அடுத்த நொடி அடுத்த அழகுகப்பல் உதயமாகும்
அடிக்கும் காற்றிலும் ஓடும் நீரிலும்
இதன் முடிவு முன்னே எழுதப்பட்டிருந்தாலும்
கும்மாளம் போடும் சிறுவனின் கையில் பிறப்பெடுக்கும்
அவன் ரசிக்கும் சிறு நொடிக்காய் உருவெடுக்கும்
கப்பல் செய்யும் இவன் நேர்த்திக்காய்
நாளை மழை வராவிட்டாலும்
வாசலிலே காத்திருக்கும் ஓராயிரம் வண்ணக்காகிதங்கள்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (19-May-17, 12:17 am)
பார்வை : 77

மேலே