இதெல்லாம் இன்னும் மறக்கலை ம்ம்
இதெல்லாம் இன்னும் மறக்கலை ம்ம்
=============================
பல தவணை ஆலோசிக்கிறேன்,
இப்போதும் எனக்குத் தெரியவில்லை,
நா அத சொல்லணுமா வேணாமான்னு ம்ம்,
சொல்லாமே விட்டுட்டா,
ஒருவேளை, என்னோட மனசு,
அதை இனி,
எப்போதும் சொல்லாமே விட்டிடலாம்,
தனிமையிலிருக்கும்போது
சிலபோதெங்கிலும்,
அந்த சல்லியப்படுத்தல்களை,
மோகித்திருக்கிறேன்,
சல்லியப்படுத்தும்போதும்,
விளையாட்டுக்காமிக்கும்போதும்,
தோற்றுத்தராதே,
மனப்பூர்வம் பிடிச்சு வைத்திருந்தேன் ன்னு
சொல்றதுதான் உண்மை,
சும்மா,
அது என்னோட ஒரு சிலிர்ப்பு ம்ம்,
ஆமா, நீ நெருங்கும்போது,
எனக்குள் உண்டாகும் ஒரு சிலிர்ப்பு ம்ம்,
ஆனா இனிமேல்,
எப்போதும் என்னை உனக்கு,
வேண்டுமென்றே தோற்றுத் தருகிறேனே,
கொஞ்சம் ஏத்துக்கோயேன் ப்ளீஸ் ம்ம்,
சரி, அதெல்லாம் விடு,
நீ முந்திரித் தோட்டம் பார்த்திருக்கியா ம்ம்,
சாலமனுடைய,
சாங் ஓஃப் சாங்ஸ் இல்
சொல்லியது போல,
நமக்கு, கிராமங்களில் சென்று,
இரவு நீட்டலாம்,
அதிகாலத்து எழுந்திட்டு,
முந்திரி தோட்டங்களில் போயி,
முந்திரிவெளி தளர்த்தி,
பூ விட்டிருக்கா என்றும்,
மாதுளை, நாறங்கைகள்,
பூக்கவும் செய்தனவா என்றும் பார்க்கலாம்,
அப்போ,
அங்க வச்சி,
என்னோட எல்லாத்தையும்,
உனக்கு திறந்து சொல்லுறேன்,
தருகிறேன் ம்ம்,
உனக்கு ஞாபகமிருக்கா,
ஒருநாள், நீ என்கிட்டே, ஏதும் சொல்லாமே,
யாரோடும் பேசாமே,
எங்கோ போக இருந்தப்போ ம்ம்,
என்னைக்காவது
ஒருநாள்,
நீ திரும்ப வருவாய் என்றும்,
அப்போ,
உன்னோடொப்பம்,
துணைக்கு,
ஒரு பெண்ணொருத்தி இருக்கலாம்
என்றும்,
சொல்லியிருந்தேன்,
அதற்காக நீ சிரமித்ததும்,
தேடியதும் என,
எல்லாமானப்பின்னால்,
உலகத்தில், ஒருத்தரைப்போல,
ஏழுபேரு இருப்பாங்கன்னு
சொல்றதெல்லாம் சும்மா,
ஒருத்தரைப்போல,
ஒருத்தர் மட்டுமே இருக்கமுடியும்,
அதுதான் நிதர்சனம்,
என்று நீ சொன்னதெல்லாம்,
நீ வேணும்னா மறந்திருக்கலாம்,
ஆனா, இதெல்லாம்,
இன்னும் நா மறக்கலை ம்ம்
பூக்காரன் கவிதைகள்