மிருக வதை பாவமன்றோ

மிருக வதை பாவமன்றோ

மிருக வதை பாவமன்றோ ?

முட்டை வாடையை
தவறி நுகர்ந்தால்
முன் மூக்கறுத்து
வீச நினைப்போம் !

பிஞ்சில் கொழுத்த
கோழிக்கறி கண்டால்
பரதக் கலைகளை
மூஞ்சில் இறங்குவோம் !

ஆட்டுக்கறியென
அறியக் கண்டாலே
விரல் விட்டு
வாந்தி எடுப்போம் !

பிற கறிகள்
பேச்சு வந்தால்
உமிழ் நீர்மட்டம்
கொள்ளளவை தாண்ட
வாயுடைத்து வர வைப்போம் !

கறி நாற்றம் வருமெந்த
காய்கறியும் கூட
காண மாட்டோம்
கனவில் கூட !

கன்றுக்கு குட்டியை
காண்பித்து
பால் கறப்பதெல்லாம்
பாவக் கணக்கில்
வருமா என்ன ?

மிருக வதை பாவமன்றோ ?


Close (X)

0 (0)
  

மேலே