கி பி 3017 - வினோதன்

கி பி 3017 - வினோதன்

கி பி 3017

பொத்தானை தட்டியவுடன்
வந்து விழுவதாய்
வாழ்க்கை மாறியிருந்தது...

காம்போரம் இருந்தது
வாழைப் பழத்திற்கு
தானே தோலுறிக்க !

காலின் காதில் இருந்தது
பறக்கும் எந்திர
பாத சாவி !

மெத்தையோரம் இருந்தது
கண்ட கனவுகளை
மறு ஒளிபரப்பு செய்ய !

கால்சட்டை பையில்
புன்னகை ஒட்ட
சிரிப்பை நிறம் மாற்ற !

மோதிரத்தில் இருந்தது
பூண்டு குழம்பு மணத்துடன்
மாத்திரை வந்து விழ !

சமூக வலைத்தளங்களில்
நினைத்தவை யாவும்
எழுத்துரு பெற்று முளைத்தன !

ரோபோ நாய்க்குட்டிகள்
வாசலில் கிடந்தன...

மழை மேகங்களை
தரவிறக்க கற்று கொண்டோம்...

ஆண்களுக்கான
கர்பப் பை
முயற்சியில் இருந்தது...

நேற்றைய தவறை
சரி செய்ய முடிந்தது

நாளைய தவறை
கணிக்க முடிந்தது...

மின்னணு விதைகள்
முளைத்து காடாகி
அனல் வீச தொடங்கின...

சந்திர தேசத்துக்கு
சிற்றுந்துகள்
சீரிப் பாய்ந்தன...

பெருங்கணினிகள்
கடிகாரத்திற்குள் அடங்கின...

திருநீறு இடத்தான்
மோதிர விரல்
தேவையாய் இருந்தது !

- வினோதன்


Close (X)

0 (0)
  

மேலே