அந்த மூன்று வார்த்தைகள்

பேருந்து
பிரசவ வேதனையில்
திணறிக் கொண்டிருந்தது...

படிப் பயணத்தில்
பாதிப் பேர்
விதிப் பயணத்தை
விளையாடி...முடிக்கத் துடிக்கிறார்கள்.

பகுதி யிருக்கையை
பகிர்ந்து கொண்டேன்
பத்துவயது சிறுவனோடு...

வீறு பெண்ணிடமும்
விதி மீறும்
விலங்குகளைக் கண்டேன்
வியர்க்கும் சினத்தோடு...
விலங்குகள் மீது அல்ல
விழியழகு பெண்கள் மீதுதான்...

அக்கணத்தில்
அது நெளிவதைக் கண்டேன்...
அதற்கு பின்னல்
அவன் – அதனை
அணு அணுவாக
அளந்துக் கொண்டிருந்தான்...
அதன் விழியோ
அழும்நிலை – எனக்கு
ஆனந்தத்தை
அளித்தது...

அது என்னை
அதன் விழியால் வினாவியது...
‘அமர இடந்தா’ வென்று
அளித்திடுவோனோ..?
‘அது முடியாது’ தென்று
அகங்கரத்தோடு
அனல் பார்வையால் பதிலளித்தேன்...

மீண்டும் பார்வையில்
கெஞ்சல்...
அக்னி பார்வைதான்
மிஞ்சல் என்னிடம்...

அவன்
அடுத்தடுத்து
அளவெடுக்கத்
ஆயத்தமானான்...
அதுவால்
அதற்குமேல்
அடங்கி நடக்கமுடியாது...

அருவெறுப்பாகப் பார்த்தது
அக்காமக் கொடூரனை அல்ல...
அதற்கு உதவாத என்னை
அயோக்கியத்தனமல்லவா...?

அடுத்து என் விழி
அலட்சியமாக
அதனை ரசிக்கத் தொடங்கியது...

அலட்சியம்
அதுவை
அவளாக்கியது...
ஆம் ...
அக்காமக் கொடூரனின்
அடிவயிற்றில்
அடியொன்றை வைத்தாள்.

அவன்
அதிர்ந்து
அகன்று விட்டான்...

அடுத்தநொடியே நான் எழுந்து
அவளுக்கு இடம் கொடுத்தேன்
அமர...

அவள் விழியோ
அகலமானது வியப்பால்...
அமர்ந்து கொண்டாள்
அத்தனை அமைதியில்லை
அவள் மனதில்..?

அடுத்த பத்து நிமிடம்
அவளுக்கு பதில் சொல்லவில்லை
அடுத்தது எனது நிறுத்தம்...
அவளருகே சென்று
அவள் காதருகில்
அதனை சொல்லிவிட்டேன்...

வினாடிகள் பல
விளங்காது..
விழித்திட்டாள்...
விளங்கிய
வினாடிக்குப் பின்..
விழுங்கியது
வெட்கம் அவளை..!

புது ஜீவனை
புதுப்பித்த
புரியாத திருப்தி எனக்கு...

அவளை வெட்கமடையச் செய்த
அந்த மூன்று வார்த்தைகள்..?

‘ஒரு புழு பெண்ணானது’

உண்மைதானே..!

*******************

சிகுவார
ஜூலை 2௦௦4 ல் எழுதப்பட்டது.


Close (X)

9 (4.5)
  

மேலே