வல்லமை படக்கவிதைப் போட்டி- 111ல் பாராட்டுபெற்ற கவிதை

Vijayanagari இல் Shenbaga Jagatheesan.அத்தனையும்…

உன்
மௌனத்தை மொழிபெயர்த்து
மெல்லப் பேசிடும்
கால் கொலுசு..

கொண்டவனை மண்டியிடவைத்து,
கண்டவனை விலகிடச்செய்யும்
மிஞ்சி-
கொஞ்சம் கூடுதலாய்..

பஞ்சின் மெல்லடி காட்டும்
பாத அழகு..

அழகுக் குலமகளே,
அசையாதே
அப்படியே நில்,
அத்தனை அழகும்
அடங்கின உன் காலடியில்…!

-செண்பக ஜெகதீசன்...


Close (X)

0 (0)
  

மேலே