மௌனம் சம்மதமல்ல

பலியிடும் முன்
ஆடு தலையாட்டுவது போல்
நீயின்றி வாழ முடியாது
என அமைதியாய் இருக்கிறேன்...

தலையாட்டுவதை அனுமதி என்பதுபோல்
மௌனத்தை சம்மதம் என்றெண்ணி
பிரிந்து சென்று என்னை பலியிட்டாய்...

எழுதியவர் : தமிழ் தாசன் (22-May-17, 2:22 pm)
சேர்த்தது : பாலா
பார்வை : 329

மேலே