விளங்கவில்லை
சுண்டிவிட்டால் இரத்தம் வரும்
சிவப்பழகியில்லை நீ...
முக்காலிப் போல் பல்லிருந்தும்
முத்துப்போல் சிரிப்பழகியில்லை நீ...
காளைகளை கவர்ந்திழுக்கும்
கண்ணழகியில்லை நீ...
கண்ணைச் சுற்றி கருவளையம்
கன்னம் வற்றிய பகுதியில்
கருமேடாக பருக்கள்... – உன்
கருமை கன்னத்தில் வீற்றிருக்க...
தேன்குரல் தேவதையில்லை நீ...
ஆனாலும்...
நிதமும் உன் நினைவு – என்
நினைவை மறக்கச் செய்வதேனோ...?
இதற்கு பெயர் தான் காதலா...?
நீ மட்டுமே என் கண்களுக்கு
அழகாய் தெரிகிறாய்...
புரியவில்லை எனக்கு
காதல் என்றால் என்னவென்பது..?
எதற்காக என் மனம்
உனை நாடுகிறதென்று
இன்று வரை
எனக்கு விளங்கவில்லை...
*******************
சிகுவரா
ஆகஸ்டு 2௦௦3