கிறுக்கியின் கிறுக்கல்கள் - 04

நீயோ ஊரிலுள்ள
மலர்களையெல்லாம் ரசிக்கிறாய்..!
ஊரும், மலர்களும்
உன்னைத்தானே ரசிக்கிறது..!
*****************************************
என் மென் கோபக்காரி நீ..!
என் முன் மட்டும்
முன் கோபக்காரி நீ..!
******************************************
எப்படியும்
சிவந்துவிடுகிறது
சிலநேரம்
உன் இதழ்கள்..!
சில நேரம்
உன் விழிகள்..!
******************************************
உன் இமைகளில்
ஓரர்த்தம்..!
இதழ்களோடு
வேறர்த்தம்..!
குற்றச்சாட்டென்னவோ என்மேல்
இரட்டை அர்த்தத்தில் பேசுவதாய்..!
*********************************************
இதென்ன!
நீ அருகிருக்க இன்னமும்
எதையோ நான்
தேடிக்கொண்டிருக்கிறேனே..!
*********************************************
இருந்துவிட்டு போகட்டுமே ..!
காகிதப்பூவாய் என் காதல்..!
வாசமில்லாவிடினும்
நேசத்தில் வாடா மலராய்..!
*********************************************
நீயென்னவோ
விலகி விலகிதான் நடக்கிறாய்..!
என்னை நெருக்கிக்கொண்டே வருகிறது
நம் காதல்..!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (22-May-17, 5:39 pm)
பார்வை : 160

மேலே