அப்போதும் இப்போதும்

வங்கி கடனில் வாங்கிய கார்

வாங்கியபோது
கடவுளாகத் தெரிந்தது
கழியும்போது
கடனாகத் தெரிகின்றது.

அவளேதான் இவள்!

இரவின் சிரிப்பில்
இளவான வசந்தமானவள்
இடுக்கி பிடியாய்
இருகி கேள்வி கேக்கும்போது
இரும்பாய் தெரிகின்றாள்.

அவனேதான் இவன்!

மார்கழி மாலைப்பொழுதாய்
மகிழ்ந்து பேசியவன்
மறாத மரமாய்
மரித்துபோன முகத்தோடு பேசுகிறான்.

அப்போதும் இப்போதும்

எப்போதுமே
அப்போது
இப்போதைவிட
நன்றாகத்தான் தெரிகின்றது.
இப்போது
எப்போதையும் விட கடின கட்டம்தான்.
அப்போது
இப்போதாக இருந்து பிறகுதானே
அப்போதானது.
பிறகு ஏன்
இப்போது
அப்போதனப் பிறகு மட்டும்
நினைவாகிவிடுகிறது.
நடப்பு
நடப்பாக இருக்கும்போது
கடினம்தான்
நடப்பது நினைவாங்கும்போது
நற்றே சந்தோசம்தான்.

எழுதியவர் : இராமானுஜம் மேகநாதன் (23-May-17, 9:21 am)
Tanglish : appothum ippothum
பார்வை : 138

மேலே