முதல் முத்தம் நினைவில் நீங்குமா

அவ்வளவு அழகு நீ !
என்று ஆரம்பிக்கும்
பத்து வரிகளுக்கு மிகாமல்
ஒரு "கவிதை "

உன் இதழ் போல் நிறம்
கொண்ட சிவந்த 'ரோஜா "
ஒன்று !

கெஞ்சி கெஞ்சி கெஞ்சி
கொஞ்சி கொஞ்சி கொஞ்சி
இதயத்தில் இருந்து சிற்சில
வார்த்தைகள் !!

ப்ளீஸ் ! ப்ளீஸ் ! ப்ளீஸ் !
என்றும் கெஞ்சல்கள் !

அங்கும் இங்கும் ஆள்பார்த்து
வெட்கம் மறைத்து
இதழ் மீது இதழ் ஒற்றி
நீ தந்த "முதல் முத்தம் "

நினைவினில் நீங்குமா ?
விழிகளில் உறக்கம் தங்குமா ?
இதயம்தான் இயல்பாய் துடிக்குமா ?

எழுதியவர் : முபா (23-May-17, 7:19 pm)
பார்வை : 572

மேலே