கவலைதான் அதிகமாய் தொற்றிக்கொள்ளும்
சில கணங்கள்
உன்னை நேரில்
சந்தித்து பேசும்போது
ஏற்படும்
மகிழ்வும் உற்சாகமும்
என்னுள் அவ்வளவாய்
பற்றிக்கொள்வதில்லை !
இன்னும் சற்று நேரத்தில்
போய்விடுவாயே
எனும் கவலைதான்
அதிகமாய்
தொற்றி "கொல்" கிறது