நான் நானாகின்றேன்

நான் நானாகின்றேன்
வெயிலை உமிழ்ந்து
நிஜமெனும் நிழலில்...
சனிகளில் கண்ணாடி சட்டம் உடைத்து காற்றினை முகர்ந்து....
ஏதேனும் ஓர் இரவில் நன்னிலவை ரசித்து....
நள்ளிரவில் நட்சத்திரங்களை விரல்கொண்டு எண்ணி...
என்றேனும் மழையில்
மனதை நினைத்து.....
மாலைத் தென்றலில்
எனையே தொலைத்து....
மலை முகட்டில் நின்று
யாவையும் தவிர்த்து....
முகில் வந்து முட்டி
முடிசூடிடும் பொழுது.....
குழந்தையை அள்ளும் நேரம்
நானே மழலையாய் நேரும்பொழுது......
முல்லை கொல்லை முகர்ந்து முழுமையடையும் முற்றத்தில்.....
மகரந்தம் நுகர்ந்து மனிதர்களை மறந்து...
யதார்த்தை மறந்து நிதர்சனங்கள் தீண்டா தருணங்களில்...
நிஜமாகவே!
சில நேரங்களில்
நான் நானாகின்றேன்...

எழுதியவர் : சுரேஷ் குமார் (23-May-17, 11:17 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 391

மேலே