கண்ட நாள் முதலாய்-பகுதி-06
...........கண்ட நாள் முதலாய்............
பகுதி : 06
துளசியை அவளது வீட்டில் கொண்டு வந்து விட்டதுமே தப்பினேன் பிழைத்தேன்னு ஓடிவிட்டாள் பவி...இருந்தாலும் போகும் முன்
மறுபடியும் எதையாவது யோசிச்சு மனசைக் குழப்பிக்காதடி...எல்லாம் நல்லாதாவே நடக்கும்...என்று அவளுக்கு சில பல ஆலோசனைகளையும் சேர்த்து வழங்கி விட்டே சென்றிருந்தாள்...
வீட்டினுள் நுழைந்த துளசியை வாசலிலே வைத்து பிடித்துக் கொண்டான் துளசியின் செல்லத் தம்பி ஆதி...அவள் கையிலிருந்த பார்சலைக் கண்டதும் அவனுக்கு மிகவும் சந்தோஷமாகிவிட்டது..
"அக்கா எனக்கா வாங்கிட்டு வந்தாய்...?"
அதுவரையில் துளசியின் மனதில் அலையடித்துக் கொண்டிருந்த எண்ணங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிட்டது...அவளுக்கு என்ன கவலைகள் இருந்தாலும் அதெல்லாம் வீட்டிற்கு வரும் மட்டும் தான்...வீட்டிற்குள் வந்துவிட்டால் அனைத்துக் கவலைகளும் ஓர் நொடியில் காணாமல் போய்விடும்.அந்த அளவிற்கு அவள் தன் வீட்டையும் குடும்பத்தையும் நேசித்தாள்..அதுவும் அவளது தம்பி ஆதி என்றால் அவளுக்கு உயிர்...அவள் பிறந்து 15 வருடங்களின் பின் பிறந்தவன் என்பதால் வீட்டிற்கே செல்லப்பிள்ளை அவன் தான்...
அதிலும் துளசிக்கு சொல்லவே தேவையில்லை...அவளுக்கு மிகவும் ஸ்பெஷலானவன் ஆதி..வழமையாக வெளியில் சென்றால் அவனுக்கு ஏதாவது வாங்கி வருபவள்...இன்று இருந்த மனக்குழப்பத்தில் அதை மறந்தே போய்விட்டாள்...அவனைக் கண்டதும் என்ன சொல்லி சமாளிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தவள்,அவன் பார்சலைக் காட்டிக் கேட்டதும் தான்...தான் சாப்பிடாது அதை பார்சலாகக் கட்டிக் கொண்டு வந்ததே அவளுக்கு ஞாபகம் வந்தது..
தன்னையே ஆவலாக நோக்கிக் கொண்டிருந்த தம்பியின் கன்னத்தை பிடித்துக் கிள்ளியவள்....
"உனக்குத் தான்டா தம்பிப் பையா...நீயும் எடுத்திட்டு,வீட்டில எல்லாருக்கும் கொடுத்து சாப்பிடு சரியா??"
"ம்ம்....சரி அக்கா....ஆமா பவி அக்கா எங்க??உன்னை கொண்டு வந்து விட்டதும் ஓடிட்டாங்களா??இப்ப எல்லாம் அவங்கள பார்க்கவே முடியல....ரொம்ப பிசி ஆகிட்டாங்க போல..."
"ஆமாட அவ இன்னும் பத்து நாளில மேற் படிப்புக்காக லண்டன் போறாள்...அது தான் கொஞ்சம் வேலையாகத் திரிகிறாள்..."
இதை சொல்லும் போதே இதுவும் ஒரு காரணமென்றாலும்,உண்மையிலேயே எதனால் அப்படி ஓடினாள் என்று துளசிக்கா தெரியாது??அதை நினைக்கும் போதே மெல்லிய சிரிப்பொன்று அவள் முகத்தில் எட்டிப் பார்த்தது..அவளை இன்று ரொம்பத்தான் படுத்திவிட்டேன் போலும்....இரவு மறக்காமல் அவளுக்கு கோல் செய்து கதைக்க வேண்டுமென எண்ணிக் கொண்டாள்....
"என்னக்கா தனிய சிரிச்சிட்டிருக்காய்...?"
"அது ஒன்னுமில்லடா,உன்னோட பவி அக்கா இன்னைக்கு கடற்கரையில் பண்ணிண கூத்தை நினைச்சனா அதான் சிரிப்பு வந்திடுச்சினு ஏதோ சொல்லிச் சமாளித்தவள்...அவள் உன்னை போறதுக்கு முதல் கட்டாயம் பார்க்குக்கு கூட்டிப் போறேன்னும் சொன்னாடா என்ற தம்பிக்குத் தேவையான தகவலையும் சேர்த்தே வழங்கினாள்....
"ஹையா ஜாலி...என்று கூவிக் கொண்டே வீட்டினுள் ஓடினான் ஆதி..."
அவன் போனதும் தானும் உள்ளே சென்றவள் சின்னக் குளியள் ஒன்றை போட்டு விட்டு அம்மாவைத் தேடி சமையலறைக்குச் சென்றாள்...
"அம்மா.....என்று அழைத்தவாறே அவளது அம்மா கலைவாணியை பின்னாலிருந்து கட்டிக் கொண்டாள்....அவளது அம்மா கலைவாணி என்ற பெயருக்கு ஏற்றால் போலவே அவரது முகத்தில் எப்போதும் ஒரு தேஜஸ் இருக்கும்....இந்த வயதிலும் அவர்கள் இவ்வளவு இளமையாக இருப்பதைக் கண்டு துளசிக்கு எப்போதுமே பெருமை தான்...
"என்னடா....வந்தாச்சா??சூடா டீ போட்டுத் தரவா?
அப்போது துளசிக்குமே ஏதாவது சூடாக குடிக்க வேண்டும் போல் தான் இருந்தது..அதுவும் அவளது அம்மா போடும் டீ என்றால் அவளுக்கு அவ்வளவு பிரியம்...பவி கூட இதற்காகவே தினமும் மாலைகளில் தவறாது இங்கே ஆஜராகி விடுவாள்....அந்த அளவுக்கு துளசியும் பவியும் அம்மாவின் டீக்கு அடிமை...
"ம்ம்....தாங்கம்மா....ஆமா சுசி இன்னும் வகுப்பு முடிஞ்சு வரலையா ??"
சுசி துளசிக்கும் ஆதிக்கும் இடையில் பிறந்தவள்....துளசியை விட 6 வயது இளையவள்....இன்னும் நான்கு மாதத்தில் உயர்தர பரீட்சை இருப்பதால்,அவளுக்கான வகுப்புகள் அறம்புறமாக நடந்து கொண்டிருந்தது.
"இல்லைடா....அவளுக்கு இன்னைக்கு 7 மணி அப்படி தான் முடியும்...அதனால அப்பா வரும் போது அவளையும் கூட்டிட்டு வரேன்னு சொல்லியிருக்கார்......இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திடுவா....நீ போய் ஹோல்ல இரு நான் டீ போட்டு எடுத்திட்டு வாறேன்..."
"ம்ம்...சரி மா...என்று விட்டு ஹோலில் சென்று டிவியின் முன்னே அமர்ந்து கொண்டாள்.."
அங்கே ஆதி ஏற்கனவே துளசி கொண்டு வந்ததை சாப்பிட்டுக் கொண்டே டிவியில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்தான்....அவளுக்கு கார்ட்டூன் என்றாலே பிடிக்காது...மற்ற எல்லா விசயத்திலும் தம்பியைக் கொண்டாடுபவள் டிவி விசயத்தில் மட்டும் அரக்கி ஆகிடுவாள்....
பல்கலைக் கழகத்தில் ஆங்கில விரிவுரையாளராக பணியாற்றும் துளசிக்கு வார இறுதி நாட்களில் மட்டுமே விடுமுறை....அதனால் அந்த இரண்டு நாட்களும் டிவி அவளது இராச்சியத்தின் கீழ் தான் இருக்கும்....என்ன தான் அவள் இவ்வளவு வளர்ந்திருந்து,கற்பிக்கும் ஆசானாக இருந்தாலும் டிவிக்காக சண்டை போடும் பழக்கம் மட்டும் அவளிடம் மாறவேயில்லை....இந்தக் குணத்தை அவள் எத்தனையோ முறை மாற்றிக் கொள்ள முயற்சித்தும் அவளால் அதை மாற்றிக் கொள்ளவே முடியவில்லை.....
"டேய் ஆதி...டிவி ரிமோட்டைத் தாடா....?"
"தரமுடியாது போ....இந்தக் கார்ட்டூன் முடிஞ்சதும் தாறேன்.."
இப்படி எல்லாம் கேட்டா நீ தர மாட்டாய் என்றவாறே அவனது கையிலிருந்த ரிமோட்டை பறித்துக் கொண்டாள்.
"போ.....இனி உன் பேச்சு கா...என்று சொல்லிவிட்டு கோபமாக தாயிடம் முறையிடுவதற்கு உள்ளே சென்றுவிட்டான் ஆதி..."
"போடா....போடா....உன் கோபமெல்லாம் எனக்கு ஜீஜீபி என்றவாறே டிவியில் சன்மியூசிக் சனலை மாற்றினாள்..."
அவளுக்காகவே காத்திருந்தது போல் சன்மியூசிக்கில்"உன்னைப் பார்த்த பின்பு நான் நானாகவில்லையே...."எனும் பாடல் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.....இதுவரை நேரமும் எங்கோ சென்றிருந்த அவனது நினைவுகள் மீண்டும் அவளது இருதய வாசலைத் தட்டத் துவங்கியது.....
தொடரும்......