மருத்துவச்சி அம்மா

🌷🌺மருத்துவச்சி🌺🌷

சவம் என்றே இன் உயிர் காக்கா
இரு உயிர் சவத்திற்க்கு எல்லாம்
ஓர் உயிராய் இருந்து இரு உயிர்
காத்தவளே!

தீண்டாமை கண்டாலும் எந்த ஒரு
இனத்தவரையும் தன் குணமார
இந்த பூ உலகிற்கு தந்தவளே!

உன் புகழ் அழிந்துபோன தாலோ!
இன்று,கதிர் வீச்சு சோதனை!
மருத்துவமனை எங்கும்!

கண் திறந்த தாயின் முகத்தில்
இல்லை அம்மா நீ கண்ட புன்னகை.
வாடி தவிக்கிது அம்மா!

நீ குணத்திற்காக
பார்த்த பிரசவம் எல்லாம் இன்று
பணத்திற்காக!

காலம் பார்க்க என்ன கருவி வைத்தாயோ!
தாயே!
அன்றே நீ பார்த்த நாள் தவறவில்லையே!

கணியுலக வாழ்கையாம் இன்று!
துணிந்து சொல்லா! பிரசவ நேரம்
இன்று.

தொப்புள் கொடி அறுப்பதற்கா!
கத்தி! அன்று!

கத்தி படா இடம் உண்டா? இன்று!

என் குல மருத்துவச்சிகளுக்கு சமர்பணம்.

எழுதியவர் : மருது என்ற மருதராஜன் (25-May-17, 8:57 pm)
பார்வை : 178

மேலே