நம்ம தமிழீழம் நம்ம தமிழ் நாடு நம்ம திண்டிவனம்

வனத்துக்குள்ளே(காட்டுக்குள்ளே) வாழுறோம் நாங்க
திண்டிவனத்துக்குள்ளே(புளியங்காட்டுக்குள்ளே) வாழுறோம் நாங்க ...

பணம் எல்லாம் பெருசில்ல போங்க
எங்களுக்கு பணம் எல்லாம் பெருசில்ல போங்க...

வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடு
அது எங்க நாடு

தமிழ்நாட்டில் பெரிய மாவட்டம்
எங்க விழுப்புரம் மாவட்டம் (விழிமா நகரம் )
நம்ம மாவட்டம்

பாண்டிச்சேரி
நம்ம பாண்டிச்சேரி (புதுச்சேரி )
எப்பொழுதுமே எங்களை பிரிக்க முடியாதே

திண்டிவனம் செஞ்சி
திண்டிவனம் செஞ்சி
செஞ்சி எங்களோட வரலாறு
எங்களோட வரலாறு

தென் ஆற்காடு
நாங்க தென் ஆற்காடு
அட ஆற்காடு

ஓய்மானாடு கிடங்கில் எங்க ஊரு
சம்புவரையர் மாவட்டம் (திருவண்ணாமலை மாவட்டம் ) நம்ம தோழன் ...

அன்புனு வந்தா கட்டிக்குவோம் ...
வம்புனு வந்தா வெட்டிக்குவோம் ...

நம்பி வந்தா உசுர கொடுப்போம் ...
நம்பிக்கை துரோகம் இங்கே இல்ல ...

மதம் வேறுபாடு அறியாதோர் நாங்க
எல்லோரும் இங்கே தமிழ் தாயின் பிள்ளை

சமத்துவம் பார்க்க என்னோடு வாங்க
திண்டிவனம் தானே சரியான ஊரு ...
சமதர்மம் தானே இங்கு எல்லோர்க்கும் தீர்ப்பு ...

திருவக்கரை வாங்க கல்மரம் பாத்துட்டு போங்க ..,
வீடூர் அணை காமராசர் ஐயா கட்டியது
செஞ்சி காட்டிலும் மலையனுரில் இருந்தும் ஓடி வருகிறது ...

மேல் மலையனுர் வந்து
ஊஞ்சல் உற்சவம் பாருங்க
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாளையும்,கபிலர் குன்றும் பாருங்கோ ...

திந்திருணீஸ்வரரையும் ...பஜாரில் இருக்கும் பெருமாளையும் பாருங்கோ ...
மயிலம் முருகரை காணுங்கோள்...


குறிப்பு : நம் வரலாறை நாம் அடுத்த தலைமுறைக்கு சிதையாமல் கொண்டு செல்வோம் ....இல்லை என்றால் திருக்குறளை எழுதியது அய்யர் என்றும் அதை வடமொழியில் முதலில் எழுதினார்கள் என்றும் , திராவிடன் எழுதினான் , இந்தியன் எழுதினான் என்றும் கட்டிவிடுவார்கள் ....

திருக்குறளை எழுதியவர் தமிழர் ...
அவரை திருவள்ளுவர் என்று சொல்வார்கள் ...
அவர் திருக்குறளை எல்லா மனிதருக்காகவும் எழுதினார் ...
எல்லா மொழிக்காரருக்கும் ...எல்லா மதத்தவர்க்கும் ...எல்லோருக்காகவும் .....
திருக்குறளின் பொருள் எல்லோருக்குமானது ....
எப்படி உடம்பில் ஓடும் ரத்தம் எல்லோருக்கும் சிவப்போ அதே போல் அதன் பொருள்
எல்லோர் வாழ்க்கைக்கும் உரித்தானது
அதனால் தான் அவர் அதில் எங்கேயும் தமிழ் என்று குறிப்பிடவில்லை
எந்த கடவுளையும் குறிப்பிடவில்லை (காரணம் தமிழன் மட்டும் தான் ...மதம் ஏதும் இல்லை )
அப்படி குறிப்பிட்டு விட்டால் ஒரு இனத்தவருக்கு ஒரு மதத்தவருக்கு என்றாகிவிடும் ...

தமிழன் மதங்களுக்கு அப்பாற்பட்டவன்....


தமிழன் மட்டும் தான் மொழிக்கு திருவிழா எடுக்கிறான் ...
மதத்திற்கு இல்லாமல் .

தமிழ் கடவுள் ...

பச்சை மஞ்சள் சிவப்பு தமிழன் நான் ...
ஹா ...ஹா... போங்க சார் ...
உங்கள் நிறங்களை (வெறியை எம் மீது திணிக்காதீர் ) விட்டு தள்ளுங்கள் ....

வரலாறு அறிந்து பேசுங்கள் ...
தமிழனின் ஆதங்கம் புரியும் ....

ஹிந்தியனுக்காக/ சிங்களனுக்காக தமிழன் நல்லது மட்டுமல்ல, வரி நிறைய தருகிறான் ...
இந்தியனோ / சிங்களனோ தமிழையும் , தமிழனையும் அழிக்கவே பார்க்கிறது ...

ஆளை கொல்வது மட்டும் கொலை அல்ல ...அதை விட கோடி மடங்கு பெரிய தவறு அடையாளத்தை அழிப்பது ....
இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய இனப்படுகொலை ....
தமிழினப் படுகொலை ,,,,
மீதி நாடுகளிலோ மதத்தால் ...ஆனால் எங்களுக்கு ...
எங்கள் செம்மொழியின் மீது இருக்கும் பயத்தால் ... ...
எம்மை அழித்து விட்டு எம் இடங்களை எம் வளங்களை பிடிக்க வேண்டும் ...
எம் அடையாளங்களை திருட வேண்டும் ...
நம் அடையாளங்களை அவர்கள் அடையாளங்களாக மாற்ற வேண்டும் ...

உதாரணமாக இலங்கை ஸ்ரீலங்கா என்றும்
திருவரங்கம் ஸ்ரீரங்கம்
திந்திருணிவனம் திண்டிவனம் என்றும் மாற்றி விட்டார்கள் ....

எங்கள் வளங்களை கொள்ளை அடித்து விட்டு
எங்கள் இயற்கையை அழித்து விட்டு
சில ரொட்டி துண்டுகளை
நாய்க்கு போடுவது போல் போட்டு
எம் மக்களை ஏமாற்றி அடிமையாக்கப் பார்க்கிறீர்களே ...
எம் இனம் உலகம் உள்ளவரை வாழும் ...,
வாழ்க தமிழ் ....

எங்களுக்கு எம் இனம் மட்டும் தான் வாழ வேண்டும் என்றோ ...
இந்து மதம் தான் வாழ வேண்டும் முஸ்லீம் வாழ கூடாது என்றோ வெறி இல்லை ...
எல்லோரும் மனிதர்கள் ,,,எல்லோரும் நன்றாக வாழ வேண்டும் ...
அவர் அவருடைய அடையாளத்தோடு ...மகிழ்ச்சியாக...
பூமி பூக்களோடு புன்னகையும் பூக்கட்டும் ....

வந்தாரை வாழ வைத்தவன் ...
எத்தனை பேரால் எம் இனம் குறுகியது என்பதை அறிவாய் ...

எதுவுமே (வரலாறு )இல்லாத ஹிந்தி சிங்களம்
என் தமிழை அழிக்க வருகிறது ....

தமிழ் அழிந்தால் நாங்கள் அழிவோம்
நாங்கள் அழிந்தால் தமிழ் அழியும் ...
எம் தமிழையும் தமிழரையும் காப்போம் ....
தமிழ் தான் எங்கள் அடையாளம் ...

நாங்கள் நிறமற்றவர்கள்(வெறியற்றவர்கள் மத வெறி ...) ...
மதம் அற்றவர்கள் ....
தமிழர்கள் ....
ஆம் நாங்கள் கற்பு , கருப்பு ...

ஒரு சிலர் கேட்கிறார்கள் முஸ்லீம் (கிருஸ்துவன் )எப்படி தமிழனாக முடியும் ...
மானங்கெட்டவர்களே ...
கேட்டுக்கொள்ளுங்கள்
இங்கே முஸ்லீம் ஹிந்து கிருஸ்துவன் வேறுபாடு கிடையாது
நாங்கள் எல்லோரும் ஒரு தாய் பிள்ளைகள் ...
உங்கள் ஹிந்து வெறியை உங்கள் இடத்தில் வைத்துக்கொள்ளுங்கள் ...
இங்கே வந்தால் தூக்கி எறிவோம் ,...

இங்கே தமிழன் மட்டுமே ...
நீங்கள் ஹிந்து முஸ்லீம் கிருஸ்துவன் என்று எங்கள் மீது சாயத்தை பூசினீர் ...
இங்கே மதங்களை வெளிநாடுகளில் இருந்து வந்து பரப்பியதே , மற்றும் மாறியதே ...
பரதேசி படம் அறிவீரோ ...

ரஹ்மான் அண்ணா விருது வாங்கும் பொழுது தன் தாய் மொழியில் எல்லா புகழும் இறைவனுக்கே என்று சொன்னார் ..அது பற்று ...
அப்துல் கலாம் அய்யா ...யாதும் ஊரே யாவரும் கேளீர் ...என்றார் ...தாய் மொழி பற்று ...

திரு . நரேந்திர மோடி அவர்கள் ...அவர் பெயரை யாரும் அழைக்கவில்லை ...அவரின் சாதி பெயரையே அழைக்கிறார்கள் ...
இலங்கையில் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று ஹிந்தி வாடையில் சொன்னது அரசியல் ...
தமிழ் நாட்டில் ஹிந்தியை திணித்துவிட்டு இப்படி சொல்வது ?

எவ்வளவு அரசியல் ...
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் ...
ஆனால் தமிழ் நாட்டில் எவ்வளவு அரசியல் பிழைகள் ...

தமிழை வைத்து விளம்பரம் தேடாதீர் ...
வியாபாரம் செய்யாதீர் ...
அரசியல் செய்யாதீர் ...
தமிழ் எங்கள் தாய் ...தமிழ் எங்கள் வாழ்வு ...அடையாளம் ...
எங்களுக்கு எல்லாமே தமிழ் தான் ...

உங்கள் அடையாளத்தை விட்டு தராதீர்கள் எதற்காகவும் ....
உங்கள் அடையாளம் உங்கள் தாய் மொழி ....
(ஒருவருக்கு ஒரு தாய் தான் ...ஒரு தாய் மொழி தான் ....தாய் மொழி என்பது உயிருக்கு மேலானது ...)
யாருடைய அடையாளத்தையும் அழிக்காதீர் ....
எந்த மொழியையும் வெளி ஆட்கள் மீது திணிக்காதீர் ....
ஏன் என்றால் அது அவருடைய அடையாளம் ....

ஒருவர் ஒருவராக தம் அடையாளத்தை இழந்தாலோ
இழக்க வைத்தாலோ
தம் இனம் அழிகிறது என்று மறக்காதீர் ....
பழ மொழியே இருக்கிறதே சிறு துளி பெரு வெள்ளம் என்று ....

உதாரணத்துக்கு ....(எல்லோருக்கும் நன்றாக புரியும் )
திரு . ரசினி அவர்கள்
தன் தாய் மொழியை தன்னுடைய அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல தவறி விட்டால் ...அவர் வழி ஊடறுத்து செல்ல வேண்டிய தாய் மொழி அதோடு நின்று விடும் ....
இப்படி தான் ஒவ்வொரு தாய் மொழியும் அழிவு பாதையை சந்திக்கிறது ....
இதை தான்
தமிழ் இனி மெல்ல சாகும் என்ற குறும் படம் இதை சரியாக சொல்கிறது .
இந்தியாவில் இந்தி என்ற ஒரு மொழி பல மொழிகளை நசுக்குகிறது ...

தமிழ் ஈழம் ஏன் வேண்டும் என்றால்
தம் மண்ணில் தமிழும் ,தமிழர்களும் நிம்மதியாக மகிழ்ச்சியாக அங்கீகாரத்தோடு வாழ வேண்டும் அதற்காக

தனி தமிழ் நாடு ஏன் வேண்டும் என்றால்
தமிழ் வாழ வேண்டும் அதற்காக
70 வருட இந்தியாவிற்காக
பல ஆயிரம் வருட தமிழன் பாடு பட்டான் ...
ஆனால் கடைசி வரை தமிழை அழிக்க மட்டுமே நினைக்கிறான் இந்தியன்

இரு நாடும் தமிழும் தமிழர் எந்த இடைஞ்சலும் தொல்லையும் திணிப்பும் இல்லாமல் ...
எம் மொழியும் மண்ணும் நன்றாக இருக்க வேண்டும் அதற்காக ....
ஒரு நாடு ,ஒரு இனம்... ஒரு நாடாக வேண்டும் அது தான் எந்த திணிப்பிற்கும் இடம் தராது .....

எம் தாய் மண்ணும்
தாய் மொழியும்
தமிழ் இனமும்
செழித்து வாழ ...

உலகில் உள்ள எல்லா தமிழர்களுக்காக தனி தமிழ் நாடும் தமிழ் ஈழமும் மலர்ந்தே தீர வேண்டும் ...
ஒரு மொழி... ஒரு இனம்... ஒரு நாடு ...
தமிழீழமும் தமிழ் நாடும் கிடைத்தால் மட்டும் போதாது ....
நம்மை நம் மண்ணை ஆள
நம்மவர் (தமிழர்- நம்மில் ஒருவர் ...நம் இனம், சகோதர சகோதரிகள், ஒரு தாய் பிள்ளைகள் ...தமிழ் தாயின் பிள்ளைகள் ...இதில் எந்த சாதி மத சாயலும் கிடையாது ...எல்லோருக்கும் ரத்தம் சிவப்பு தானே ...மனிதன் பிறந்த பின் தான் மதம் பிறந்தது ) நம் மொழியை உயிராக (பணத்தை அல்ல) நினைப்பவர் ஆள வேண்டும் ...
உதாரணத்துக்கு பிரபாகரன் அண்ணாவை போல் தன் தாய் மண்ணிற்காகவும் தன் தாயிற்காகும் (தாய் மொழிக்காகவும் ),சகோதர சகோதரிகளுக்காவும் (தமிழர்கள் )எந்நிலையிலும் போராடிக்கொண்டே இருப்பவர்கள் ....

வாழ்க தமிழ் .....

என் தாய் தமிழ் ...
என் அடையாளம் தமிழ் ...
என் வாழ்க்கை தமிழ் ...
என் கடவுள் தமிழ் ....
என் இயற்கை தமிழ் ...
என் சுவாசம் தமிழ் ...
என் உலகம் தமிழ் ....
என் மொழி தமிழ் ....
என் உயிர் ,இசை , உடல் , உணவு , இருப்பிடம் தமிழ் ....
என் தாய் மொழி செந்தமிழ் ....
எனக்கெல்லாமாய் என் தாய் தமிழ் ....
தமிழச்சியாக பிறந்து தமிழச்சியாக வளர்ந்து தமிழச்சியாகவே ஒவ்வொரு நொடியும் வாழ்ந்து தமிழச்சியாகவே மரணிக்க நினைக்கும் தமிழச்சி ~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (28-May-17, 3:24 pm)
பார்வை : 179

மேலே