கிறுக்கியின் கிறுக்கல்கள் - 05

என்னிடம் விடைபெற்று
நீ ஓய்வெடுக்க
வேலைநிறுத்தம் செய்கிறது
#என்_விரல்களும்..!
#விசைப்பலகையும்..!
நீ அணைப்பாயென்று தெரிந்தும்
அடம் பிடிக்கிறது
#என்(பெண்)_ஆசை..!
யாழென நானிருக்க
வாளெனும் வார்த்தைகளால்
பாழென ஆனது
என்_ஆழ் மனம்..!
எதைப்பற்றி எழுத எத்தனித்தாலும்
உன்னிடமே தஞ்சமடைகிறது
#என்_எண்ணங்கள்..!
நீ உறங்கிக்கொண்டிருக்க
விழித்துப்பார்க்கிறது
#ஒரு_கவிதை..!
ஒன்றுமில்லையா என நீ வினவ
எண்ணங்களை எண்ணமுடியாமல்
#விழிக்கிறேன்_நான்..!
எட்டி நின்று நீ கட்டியணைக்கிறாய்
முட்டி வந்து முத்தமிடுகிறது
#நின்_மூச்சுக்காற்று..!