மழைக்கால நிலவு
கொஞ்சி பெய்த தூறலிலே
கொஞ்சும் அழகுடன்
அவள் வந்தாள்...
அசைந்து ஆடிய மேகத்திலே
கவிதை நடையாய்
அவள் நடந்தாள்...
இலைகளில் தூங்கிய துளிகளிலே
பளிங்கு கல்லாய்
அவள் ஒளிர்ந்தாள்...
தாளம் இட்ட சாரலிலே
காதல் மொழியை
அவள் உரைத்தாள்...
கருமை பூசிய வானத்திலே
காதல் ஓவியம்
அவள் வரைந்தாள்...
மரத்தில் சொட்டும் மழையினிலே
சொட்டுத் தேனாய்
அவள் சேர்ந்தாள்...
மகிழ்ச்சி பேசிய மண்ணினிலே
கொட்டும் ஒளியால்
அவள் கலந்தாள்...
அன்பு உருகும் மொழியாலே
கவிதை பேசி
அவள் சென்றாள்...!!