இதே மாதத்தில்தான் நாங்களும்
ஈழத்தின் இனப்படுகொலை
நிகழ்ந்தது
இதே மாதத்தில்தான்......
அங்கே உயிர்கள்
மடிய மடிய.....
நீங்கள் விடிய விடிய
கொடியை
பிடித்துக்கொண்டு
பால்ப்பொங்கல்
செய்து
கொண்டாடிய
வெற்றியை நம்
கண்களும் கண்டது......!!
முப்பது ஆண்டுகால
உரிமைப்போராட்டத்தை
உலகநாடுகளின்
ஒத்துழைப்போடு
ஒழித்தோம் என்று
உரிமை கொண்டாடும்
ஈனக்கூட்டம்......
இனவாதம்
பேசிக்கொண்டு
இன்னும்
நம்மை
வெருட்டுதடா......!!!
இலங்கையின்
தென்பகுதி
தண்ணீரில் மூழ்குதடா
அது கண்டு
நம்
உள்ளமும்
பதறுதடா.....இடப்பெயர்வும்
இன்னல்களும்
எப்படி இருக்குமென்று
மூன்று தசாப்தங்கள்
அனுபவித்தது
நாம் சொல்லவா
உனக்கு......?
கந்தகப் புகையில்
உயிரைப்பிடித்து
காடுமேடு
கடல்கடந்து
கைதியாக
உங்களிடம்
சரணடைந்தோமே......சரணம்
கச்சாமி
சொல்லுகிற
புத்தனின் பிள்ளைகள்
நம்மை
சாகடித்து
சாக்கடையில்
வீசினரே.....!?!?
உங்கள் ஊரில் சுனாமி
என்றதும்
உங்களைக்காக்க
முதலில்
ஓடிவந்தது
எங்கள்
ஊர்தானே.....
எம்மினத்தின்
அழுகையின்
ஒலிகள்.....உங்கள்
செவிகளில்
விழவில்லை ஏனடா....???
அண்டை நாட்டு
நிவாரணக்கப்பல்
அணிவகுத்து
காத்திருக்கு
அனாவசியமாக
அவன் துறைமுகத்தில்.....இன்று
ஒரு துண்டு
ரொட்டிக்காக
பல லட்ஷம்பேர்
பட்டினி
கிடந்தபோது......பாராமுகமாய்
இருந்தீரே......
இதுவும்
துரோகம் தானே.....!?
தமிழகத்து
உறவுகள்
எங்களுக்கு
தந்த
நிவாரணப்பொதிகளை
சிறுதொகையை
பதுக்கிவிட்டு
திருப்பியனுப்பி
சிரித்து
மகிழ்ந்தது
அன்றய சிங்கள
அரசு.......!!!
முப்படையும்
களத்தில்
மனிதர்களை
மீட்க இன்று......நான்கு
லட்ஷம்
உயிர்களைக்கொல்ல
முப்படையும்
களத்தில்
அன்று.....!!
எல்லாமே
உயிர்தான்
எங்களிட்கு
கைக்குழந்தையோடு
மட்டும்
ஓடிவரவில்லை
நாம்.....எங்கள்
வீட்டு
நாய்க்குட்டியும்
ஆட்டுக்குட்டியும்
கூட
கொண்டுவந்தோம்......!!
தேசம் மீட்ப்புப்
போராட்டத்தில்
தேசத்தின்
துயரங்களில்
பங்கெடுத்த
புனிதர்கள்
வாழ்ந்த
நம் பூமியில்......
இன்னொரு
தேசம்
அழியும் நிகழ்வை
பொங்கலுண்டு
மகிழ்ந்த
இந்த நூற்றாண்டின்
மகிந்தர்
வாழும்
காலம் இது......!!!
ஆனாலும்
அழுகிறோம்.....
அவனிடத்தில்
தொழுகிறோம்.....
ஆண்டவனே
அனர்த்தத்தில்
இருந்து
அனைவரையும்
காப்பாற்றிடு
என்று......!!!
தண்ணீரில்
உங்கள்
கண்ணீர்
கலந்து மறைந்துவிடும்.....
தமிழன்
உள்ளவரை
எங்கள்
அழிவைக் கொண்டாடிய
சீனவெடிக்
கொண்டாட்டங்களை
சிறுதுளியும்
மறவோம்......!!!!
நாங்களும்
அனுப்பிவைக்கிறோம்
எம்மிடம்
உள்ள......
மனிதாபிமானத்தை
மட்டும்......காரணம்
நாங்களும்
காத்திருக்கிறோம்
உங்களைப்போல
நிவாரணம் கேட்டு......!!!!!!!
நாடு நலம்பெற.......!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
