தந்தையோடு ஒரு நிமிடம்

தந்தையின்
உணர்வுகளை புரிந்துகொள்ள..
நீ தந்தையானால் மட்டுமே..
தகுதி பெறுவாய்..!

தந்தையோடு
தனையனின் உறவு
தன்மான சிக்கல்...

கொஞ்சம் பேசி..
நிறைய புரிதலுக்கு..
நிமிடங்கள் பற்றுவதேயில்லை...

தந்தையோடு
பேசிய வார்த்தைகளை விட
மோதிய வார்த்தைகளே அதிகம்...

வெற்றிக்கான
வழிமுறைகளை
சொல்லுவதை விட...
தோல்விகளை
தவிர்ப்பதற்கான
வழிகாட்டல்களையே
சொல்லித்தருவார்கள்...
தான் பெற்ற பாடம்
தன் பிம்பத்திற்கு
வரக்கூடாதென்ற வைராக்கியத்தோடு...

வியாக்கியானம் பேசிடுவோம்..
வேதனை தரும் வார்த்தைகளோடு...

சார்ந்திருத்தல் என்பதன்
அர்த்தத்தை
அவரிடமிருந்து
அறிவதேயில்லை...

அதிகாலை தூக்கத்தை
அவசரமே ஆனாலும்..
அவர் கலைத்திட மனம் ஒப்பாது...
அன்னையிடம்..
‘அவன் தூங்கட்டும்’ என்பார்.

அவருக்கு உடம்புக்கு முடியவில்லை
என்ற போதிலும்...
எனக்கான வேலைகளை
அவரே செய்திடுவார்
வழக்கம்போல...

எங்கோ இருப்பவனின்
தொலைபேசி எண் தெரியும் நமக்கு..
தந்தையின் தொலைபேசி எண்ணை..
கைப்பேசியில் பார்த்தால் தான் தெரியும்...

தாயோடு மணிக்கணக்கில் பேச்சு..
தந்தையோடு நொடிக்கணக்கில் முடியும்...

பிராத்தனைக்காக மட்டும்..
கடவுளை காணச் செல்வோம்..
தந்தையோடும் அப்படித்தான்...!

கடவுளை பார்க்கமுடியாது..
ஆனால் உணரமுடியும்...
உணர்ந்துபார்...
உன் தந்தையின்
உருவில்...!

***************
சிகுவரா
14/4/2017

எழுதியவர் : சிகுவரா (29-May-17, 10:15 pm)
பார்வை : 1681

மேலே