என் கவிதை நாயகிக்கு

கார்குழல் மல்லிகை சூடி
கவிதை நீ தென்றலாய் நடந்து வர
கால்கடுக்க காத்திருந்த நேரமெல்லாம்
கவிதை பல எழுதி வைத்தேன்
கவிதை நாயகி -உன்
கண் இமை மெல்ல திறந்து
கடைக்கண் பார்வை வீசினாய் !
கணப்பொழுதுகள் என் முன்னே நின்றாய்
மையிட்ட விழிகளை ரசிப்பதா !
தேன் துளி படர்ந்த இதழ்களை ரசிப்பதா
மா கனி ரசிப்பதா
மல்லிகை வாசம் நுகர்வதா
மாதுளை முத்தைப்போல் முகப்பரு ரசிப்பதா
இடையா கொடியா ! இப்படியே நில்லேன்
இன்னும் ரசிக்கிறேன்
கனத்தும் இல்லை ,சிறுத்தும் இல்லை
கச்சிதமாய்த்தான் இருக்கிறாய் !
மையலில் மலர் நீ வாடிப்போய்விடுவாயோ
ஊடலில் நீ உருகித்தான் போய்விடுவாயோ
உன்னுடனே இருப்பேனடி
உயிரைத்தான் உனக்கு கொடுப்பேனடி !