முக நூல்

ஃபேஸ் புத்தகத்தில் தமிழ் பெயர் வைத்து ஒர் ஐடீ ஆரம்ப்பித்து ஒரு வருடம் ஆகிவிட்டது...

இந்த ஐடீ ஆரம்பித்ததே 64-வது வயதில் திடீரென்று தமிழில் எழுத ஆரம்பித்தபின் தாறுமாறாகக் கவிதை, கதை, கட்டுரை எழுதித் தள்ள அதைப் பரப்புரை செய்யும் இடமாகவே கருதியதால்...

ஆரம்பத்தில் 100 நட்புகளுடன் இருந்தது ஒரு பத்து லைக்கும் ஒன்று இரண்டு கருத்துக்களும் பெற்று வாழ்ந்து கொண்டிருந்த நான், நண்பர்கள் கூடினால் அதிக பார்வையும், உலக அளவில் பிரபலமும் ஆவேன் என்று எண்ணி, ஒரே வாரத்தில் 150 இருந்து 2200க்கு மேல் நட்புகளாக கூட்ட, முடிவு இரு வேறு குழுக்களிடையே ஏற்படும் சண்டைகளின் இடையே சிக்கிக் கொண்டது போல் மூச்சு திணறியது....

லைக்குகளும், கமென்டுகளும் சிறிதளவும் கூடவில்லை... உலகில் பிரசித்தமாகவில்லை...

நல்ல எழுத்தாளர்கள், கவிஞர்கள் நட்பு வட்டத்துக்குள் இருந்தும் யாரும் என் எழுத்தைக் கண்டு கொள்ளவில்லை என்பதே உண்மை..

குழுக்களின் இடையே ஏற்படும் cross-fire-ல் இருந்து தப்பிக்க பல நூறு நட்புக்களைத் துண்டிக்க வேண்டியிருந்தது... புதிதாக நட்புக்கள் மார்க் சிபாரிசில் வந்தாலும் யாரையும் ஏற்றுக் கொள்வதில்லை...

பிரபஞ்சத்தில் கோடி சூரியனும் அதன் ஆகர்ஷணத்திற்கு உட்பட்டு சுற்றும் கோள்களும் போல், பல குழுக்களும், அவர்களுக்குள் உள்ள குழுவுக் குறிகளும் புரியாமலேயே உலா வந்து கொண்டிருக்கிறேன்...

'தூங்கினேன்' 'தும்பினேன்' 'இன்று என்ன நாள்?' 'ஹி.. ஹீ..' 'மனைவியிடம் யாரோ அடி வாங்கினார்..' போன்ற பதிவுகளுக்கு விடாமல் பல நூறு லைக்குகளும், கருத்துக்களூம் வாங்கும் இடத்தில் சில நல்ல எழுத்துக்களும் மறைந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை...

நகைச்சுவைக்கு என்றும் எல்லோரிடமும் ஒரு நல்ல வரவேற்பு இருக்கிறது. நானும் நல்ல பிறரை புண்படுத்தாத நகைச்சுவையை விரும்புவேன்..அதே போல் அரசியல்/சாதி/மதம் என்றால் வரிந்து கட்டிக் கொண்டு சண்டை போட சிலர் தயாராக இருக்கிறார்கள்.. நடு நிலை பிழற்தல் ஒரு பொருட்டே இல்லை... இவர்களின் ஒரு சார்பு நிலை தவறாமல் வருகைதரும் பதிவுகளில் தெளிவாகத் தெரியும்... ஒரு புறமும் சாராமல் நடு நிலையில் நிற்பது கஷ்டம் தான்.. ஆனால் சாய்ந்தே நிற்பது பார்த்து சகித்துக் கொள்ள முடியவில்லை..

அதே போல் மெத்தப் படித்து, பல பதவிகள் வகித்த மேதாவிகள் போடும் பதிவுகளுக்கு மாற்றுக் கருத்துப் போட்டால் உடனே நம்மை கொச்சையாக மட்டம் தட்டுவார்கள்.. இரண்டு முறை அனுபவப் பட்டபின், அந்தப் பக்கம் தலை வைப்பதில்லை...

ஆக, ஒரு வருடத்தில் புரிந்து கொண்டது, இந்த முக நூல் என்போன்ற எழுத்துக்களை வாசிக்க ஆள் இல்லாத இடம் என்றே.. அதற்காக கடை மூடிச் செல்லப் போவதில்லை...

தொடரும்...

ஒரு வருடம் கழித்து மீண்டும் ஒரு ஆதங்கத்துடன் மீண்டும் தொடரும்...

----முரளி

எழுதியவர் : முரளி (2-Jun-17, 9:08 am)
சேர்த்தது : முரளி
Tanglish : muga nool
பார்வை : 129

சிறந்த கட்டுரைகள்

மேலே