அழகான காதல் ஒளிந்து கிடக்கும்

சாப்பிடும் நேரத்தில்
சட்டென புரையேறும்
அக்கண நேரம் !
"அவன் தான் நினைத்திருப்பான் "
"அவள்தான் நினைத்திருப்பாள் "
என்று மெல்லிய நம்பிக்கை
ஒன்று இதயத்தில் இழையோடும் !
அந்த சிறு நம்பிக்கையில் தான்
ஒவ்வருக்குள்ளும் "அழகான காதல் "
ஒன்று ஒளிந்து கிடக்கும் !