தாயேது நானின்றி
என் இனத்திலும் கூட
என்னைக் கடைசியில் வைத்துக்
காயபடுத்தியது முறை தானோ!
கோபமுற்று நான் எழுந்தால்
பூலோகம் தாங்குமோ!
ஆடினால்தான் அடங்குவார்களோ!
உருவமற்றவன் என்பதால்
இறைவனென மக்கள்
நெஞ்சில் சுமந்தார்களோ!--இல்லை
எங்கும் நிறைந்திருப்பதால்
எல்லாமும் இவனால் தான்
இயங்குவதாய் எண்ணினார்களோ!
மண்ணையும், விண்ணையும்
காக்கும் என்னை நம்பலையோ!
உயர்பதவி பெறும்போது மக்கள்
எனது பணியை பறித்து
வெளியேற்றுவது
என்ன நியாயமோ!
பிரபஞ்சத்தில் மூத்தவன் நானா
இல்லை இயற்கையா?
படைத்த இறைவனே
பின்னால் வந்தவன் தானே!
யாரிடம் கேட்பது?
தண்ணீரை தாயென்றால்
தாயேது நானின்றி!