கல்வியின் சிறப்பு --- ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
தலைப்பு :- கல்வியின் சிறப்பு
கல்வி தருமே கணக்கிலா செல்வத்தைப்
பல்கிப் பெருக்கிடப் பண்புகள் ஓங்கிடும்
செல்வீர்கள் பாடசாலை சேரும் புகழ்யாவும்
வல்லதோர் வாழ்வும் வளம் .
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்