சுகமான சூழல்

சுற்றுச்சூழலை
சுகமாக மாற்றும்
குயிலிசை

அதன் இசைக்கு
தாளமிடும் மரங்கொத்தியின்
டொக் ......டொக்... மேள சத்தம்

சின்னஞ்சிறு குருவிகளுடன்
மல்லாடும் அணில்களின்
அளவில்லா கூச்சல்

அந்நியர்களாக வந்த
வெளிநாட்டுப் பறவைகளை
விரட்டும் ஆயத்தம்

அவ்வப்போது தஞ்சமடையும்
கிளிகளின் பாட்டுச்சத்தம்

இவைகளுடன் போட்டியிடும்
புறாக்களின் சத்தம்

ஓரே மரத்தில்
உறவு கொண்டாடிடும்
உயிரினங்கள் உணர்த்தாதோ
மரங்களின் அவசியம்

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (5-Jun-17, 7:43 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
பார்வை : 171

மேலே