என் கிராமம்
கிராமம்
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
ஆற்றங்கரை
ஓரம்அமைந்த வீடுகள் ....
பச்சை கம்பளம் விரித்தாற்
போல பசுமை நிறைந்த
வயல் வெளிகள்.....
கிளியும் குயில்களும் கீதம் பாட அங்கொன்று இங்கொன்றுமாய்
அமைந்த மாமரம்.......
இளமஞ்சள் போன்றிய
மாலைப்பொழுது......
குடுப்பத்தோடு அகம் மகிழும்
திண்ணை அமர்வு.......
இடுப்பில்
தண்ணீர் குடம் ஏந்தி
அன்ன நடை போடும் பெண்கள்.....
கிள்ளி
நகையாடும் மங்கையர்.....
கிட்டிபுல் பம்பரம் பாண்டி
தாகக்கட்டை பல்லாங்குழி
ஆடும் சிறுவர்கள்......
வீட்டு திண்ணையில்
அமர்ந்து காமம் இல்லாமல்
சீண்டும் ஆடவர்கள்......
தலைதாழ்த்தி
வெட்கப்படும் கன்னியர்.....
அன்னோன்னியமான உறவுகள்
தொலைந்து போன அக்காலத்தின்
நினைவுகளை.....
ஆன்ராய்ட் அலை பேசியின்
தொடு திரையில் அழகிய படங்களாக மட்டுமே காண முடிகிறது......
🌳🌴🌳🌿Samsu🌴🌳🌱🌿🌴