இயற்கை நலம் காப்போம்

வெட்டி வீழ்த்திய மரங்களால் உடல்
வெந்து கிடக்குது பூமியிங்கு...
கொட்டி தீர்த்த கழிவுகளால் மனம்
நொந்து கிடக்குது நதியிங்கு...

மேடாய் குவிந்த நெகிழிகளை
மெல்லும் வழித்தேடுது மண்ணிங்கு...
ஊடாய் கலந்த புகைக்கரையை
உறிஞ்சும் வழித்தேடுது காற்றிங்கு...

வெட்டி எடுத்த வளம்காக்க
ஏங்கி அழுகுது இயற்கையிங்கு...
வற்றி விட்ட மழைகாக்க
வருந்தி அழுகுது மரமிங்கு...

சூழல் காப்பதில் முறைகேடு இங்கு
சுற்றும் திசையெல்லாம் சீர்கேடு..
வளங்கள் காத்து மகிழ்வுடனே இங்கு
வாழும் காலம் எப்போது..?

எழுதியவர் : லோகேஷ் நாகராஜன் (5-Jun-17, 10:38 pm)
சேர்த்தது : லோகேஷ் நாகராஜன்
பார்வை : 249

மேலே