குப்பையின் விதைகள்

ஒரு மாணவன் தன் ஆசிரியரிடம்

பொது இடங்களான பேருந்து நிலையங்கள், அரசாங்க அலுவலகங்கள் மற்றும் கழிப்பிடங்கள் அசுத்தமாக இருக்கின்றனவே. பல இடங்களில் அசிங்கமான படங்களும் சொற்களும் எழுதுகிறார்களே இதற்கு என்ன காரணம் என்று கேட்டான் .

ஆசிரியர் சாக்லேட்களை எடுத்தார் .
அனைத்து மாணவர்களுக்கும் கொடுத்தார் .

அனைவர்களையும் சாப்பிடச்சொன்னார் .

சிறிது நேரத்திற்க்கு பிறகு அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து வெளியே செல்லுங்கள் என்றார் .

அனைவரும் வாயிலுக்கு சென்றனர்.

ஆசிரியர் எழுந்து இங்கிருக்கும் நாற்காலிகளின் கீழ் இப்போது கொடுத்த சாக்லெட்டின் காகித உறை பார்க்கிறீர்களா என்றார் .
அனைவரும் வெட்கி தலை குனிந்தனர்.

பெரும்பாண்மையான நாற்காலிகளின் கீழ் காகிதங்கள் கீழே கிடைத்தன.

அனைவரையும் மீண்டும் வந்து அமரச் சொன்னார் .

கேள்வி கேட்ட மாணவனிடம் என்ன புரிந்தது உனக்கு என்று கேட்டார் .

மாணவன், அனைவரும் தங்கள் இனிப்புகளை திறந்து தின்றுவிட்டு காதித உறைகளை கீழே வீசிவிட்டார்கள் என்றான்.

ஆசிரியர் அது தான் இல்லை தம்பி. இவர்கள் யாரும் அவரவர் நாற்காலிகளின் கீழே வீசவில்லை. தன்னுடைய குப்பை பிறருடைய நாற்காலியின் கீழ் வீசியிருக்கினர். இது தான் நீ கேட்ட கேள்விக்கு பதில்.

ஆசிரியர் கூறினார்

மனிதன் வக்கிர புத்திகளை கொண்டவன். மனிதன் தனியாக இருக்கும் போது தான் அவன் மிக கேவலமாக நடந்துக் கொள்கிறான்.

மனிதனின் மனதில் அசிகங்கள் தான் அதிகம். அந்த அசிகங்களை அவன் நேரடியாக சம்பந்தப்படாத இடங்களில் அவிழ்த்து விடுகிறான்.

உதாரணமாக உன் வீடு அசிங்கமாக இருந்தால் உன் வீட்டில் உள்ளவர்கள் தான் அதற்கு பொறுப்பு. அதனால் உன் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்கிறாய். ஆனால் உன் தெரு குப்பை கூளமாக இருந்தால் நான் இல்லை நான் இல்லை என்று யாரும் பொறுப்பேற்பதை தவிர்ப்பீர்கள்.

என்று கூறிக்கொண்டே எந்த மாணவனாவது சாக்லேட் உரையை குப்பை தொட்டியில் போடலாம் என எடுத்து வைத்திருக்கிறீர்களா என கேட்டார் .

ஒரு மாணவன் எழுந்து ஐயா எனது சாக்லேட் உரையை நான் குப்பை தொட்டியில் போட எடுத்து வைத்திருக்கிறேன் என்று காட்டினான் .

ஆசிரியர் கூறினார்

இவன் மனிதன். குப்பையை இவன் இங்கு வீசியிருந்தாலும் இவன் சாக்லேட் உரை எது என்று தனியாக யாராலும் கண்டு பிடித்திருக்க முடியாது . ஆனால் சமூக சிந்தனையுடன் இதை குப்பைத் தொட்டியில் வீச எடுத்து வைத்திருக்கிறான்.

நம் உடலில் இருக்கும் அசுத்தங்களை எப்படி கழிக்க வேண்டிய இடத்தில கழிக்கிறோமோ அதைப்போல குப்பைகளையும் கழிக்க வேண்டிய இடத்தில கழிக்க வேண்டும்.

அது புறகுப்பை மட்டுமல்ல.. மனதில் உள்ள குப்பைக்கும் பொருந்தும் என்றார் ஆசிரியர்...!

"CLEAN INDIA"
என்னங்க சரிதானே..!

எழுதியவர் : முகநூல் (6-Jun-17, 1:51 am)
பார்வை : 576

மேலே