தபால்காரன் தங்கராசா” - Postaman Thagarasa
ஒல்லாந்தர் ஆட்சியின் போது 1798 ஆம் ஆண்டு தபால் சேவை இலங்கையில் அறிமுகப்படுத்தப்ட்டு, பிரித்தானியர் 1815 இல் முழு இலங்கையையும் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுந்த போது பல நகரங்களில் தபால் சேவையை விஸ்தரீத்தனர். கிராமங்களில் உப தபால் நிலையங்களும், ரயில்மூலம் யாழ்ப்பாணம், மட்டகளப்பு, கண்டி. பதுளை. மன்னார். மாத்தறை போன்ற நகரங்களுக்கு இரவில் டிரவலிங் போஸ்ட் ஒபீஸ் என்ற பெயரில் தபால் பொதிகளை அனுப்ப ஒழுங்குகள் செய்தனர். அதணல், தபால் பொதிகளை’ சுமந்து சென்ற ரயிலுக்கு மெயில் டிரையின் என்று பெயரிடப]ட்டது.
வவுனியா மாவட்டத்தில், அந்த நகரத்திலேயே பெரிய தபால் நிலையம்’ அமைந்திருந்தது. அந்த நகருக்கு அருகாமையில் உலா ஊர்களில், மக்கள் தொகையை பொறுத்து சிறிய தபால் நிலையங்களும், கிராமங்ளில் உப தபால் நிலயங்களும் உருவாகின.
வவுனியாவில் இருந்து மேற்கே 20 கி மீ தூரத்தில் உள்ளது கணேஷபுரம் என்ற அழகிய குக் கிராமம்.. ஊருக்குள் நுழைந்தவுடன் குடியானவர்கள் வசிக்கும் பகுதியைக் காணலாம். உள்ளே வந்தால் வாய்க்காலும், குளத்தையும் காணலாம். அதைத்தாண்டி வந்தால் வடக்கு தெற்காக ஒரு தெரு. இதுதான் அக்கிராமத்தின் மெயின் வீதி. சிறு ஒழுங்கைள் ஆறு
வவுனியாவில் இருந்து மேற்கே மன்னாருக்கு போகும் A30 பெரும் பாதையில் உள்ள பூவரசங்குளம் தபால் நிலையத்துக்கு அருகே, வடக்கே எட்டு கிமீ தூரத்தில் அமைத்துள்ள கிராமம் கணேஷபுரம். பெயருக்கு பொருத்தமாக பிள்ளயார் கோயிலுண்டு. வன்னி குளங்கள் நிறைந்த பகுதி. பல கிராமங்களின் பெயர்கள் குளம் என்று முடிவடையும். விவசாயத்துக்கு பிரபல்யமானது வன்னி. ஒருகாலத்தில் இலங்கையின் அரிசி கிண்ணம் என்று வன்னியை அழைத்தனர். மழைக்காலங்களில் நீர் வீணாகாமல் தேங்கி நிற்க வன்னி முழுவதும் சிறிதும் பெரிதுமாக முன்னைய குறு நிலமன்னர்கள் கட்டிய குளங்களும், மழைக்காலத்து ஆறுகளும் பல இருந்தன. குளங்களை சுற்றி கிராமங்கள் உருவாகின. கிராமத்து’ மக்கள், குளத்து நீரை விவசாயத்துக்கும். தம் பாவனைக்கும் பாவித்தனர். இயற்கை வளம் நிறைத்த கிராமங்களில் கணேஷபுரம் ஓன்று. சுமார் இருநூறு குடும்பங்கள் வாழும் கிராமம். பாதைகள் நன்கு போடப்படாததால், பஸ் சேவை இருக்கவில்லை அக் கிரமத்தில் . போக்குவரத்துக்கு சைகிலையும்., மாட்டு வண்டியையும். நடையையும். நம்பி அவ்வூர் மக்கள் வாழந்தனர்.
தபால்காரன் தங்கராசா பல காலம் அக்கிராமத்துக்கு தபால் விநியோகம் செய்ததால் அக்கிராமத்தில் வாழும் குடும்பங்களை நன்கு அறிந்திருந்தான். வவுனியா தபால் நிலயத்தில் வரும் தபால்கள் கிராமங்களுக்கு ஏற்றவாறு பிரித்தப் பின்னர் தபால்காரர்கள் கிராமங்களுக்கு எடுத்து செல்வார்கள் தபால்காரர்கள். காலை எட்டுமணிக்கு வவுனியாவில் இருந்து சைக்கிளில் தபால்கள் நிரம்பிய பையோடு யுனிபோர்ம் அணிந்து செல்வது தங்கராசாவின் வழக்கம். சரியாக காலை 8 மணிக்கு தன் சைக்கில் பயணத்தை வவுனியாவில் இருந்து ஆரம்பித்து சுமார் 20 கிமீ தூரத்தை ஒரு மணித்தியாலத்தில் கடப்பது அவன் வழமை. அதுக்கு தேவையன தேக ஆரோக்கியம் தேவை. ஒருகாலத்தில் சைக்கில் வரமுன் தபாலை ஓடிசென்று படிவாடா செய்ததினால் அவர்களை “ரன்ன்ர்” என்று அழைத்தார்கள்.
அன்று, செல்லம்மா ஆச்சி, தேவகி டீச்சர், நேர்ஸ் வானதி, பலசரக்கு கடை வைத்திருக்கும் செல்லையா, வேலையில்லாமல் இருக்கும் வாலிபன் ராமலிங்கம், விவசாயி முருகையா, வவுனியா கச்சேரியில் வேலை செய்து ரிட்டயரான எழுபது கிழவன் ராசையா, ஆகியோருக்கு வந்திருந்த கடிதங்களோடு இன்னும் சில குடும்பங்களுக்குமாக முப்பது கடிதங்களைக் கொண்டுள்ள பையை சுமந்து கொண்டு அவன் பயணம் சைக்கில் அன்று இருந்தது.
தங்கராசு ஊர் மக்களில் ஒருவனாகி விட்டான். காரணம் அவன் கடிதத்தை உரியவருக்கு கொடுத்துவிட்டுப் பேசாமல் போய் விடாமல்,. சற்று நின்று, சுகம் விசாரித்து,, எழுத வாசிக்கத் தெரியாதவர்களுக்கு தேவைப்பட்டால் அவர்களுக்கு வந்த கடிதத்தை வாசிக்கவும், எழுத தெரியாதர்களுக்கு தேவை பட்டபோது கடிதம் எழுதி கொடுப்து அவன் பழக்கமாக்கிக் கொண்டிருந்ததான்.
கிருஷ்ணபுரத்தில் உள்ள குளக்கரை மீது சைக்கிளை தங்கராசு ஒட்டிச் செல்ல விரும்புவதுக்கு காரணம், பயண நேரத்தை சுருக்குவற்கும், குளத்தில் மீன் பிடிக்க வரும் கொக்குளைப் பார்த்து ரசிப்பதுக்குமே. குளக் கரை மீது பயணம் செய்யும் போது அவனுக்குப் பிடித்த பழைய பாடலான “ எரிக்;கரை போறவளே பெண் மயிலை” என்ற பாடலைப் பாடிய வாறு சைக்கிளை ஓட்டுவான்.
எழுபது வயதுக் கிழவி செல்லாட்சி. தன் பேரன் தேவனிடம் இருந்து மனியோடரும் கடிதமும் வருமென ஒரு கிழமையாக எதிர்பார்த்துக் கொண்டிருத்தாள் ஆச்சி. தங்கராசைக் கண்டவுடன் :
” என்னடா மோனே ராசு. எனக்கு ஏதும் கொண்டுவந்தனியே”. ஆச்சி அவலுடன் கேட்டாள்
“ ஓம் ஆச்சி உன்றை பேரன் தேவனிடம் இருந்து உனக்கு ஒரு கடிதம் இருக்கு”
“ எங்கை இருந்து அவன் எழுதியிருக்கிறான்”?
“ கொழும்பு, கலதாரி ஹோட்டலிலை இருந்து”
“தங்கராசு நேற்று இரவு என் பேரன் தேவனை கனவிலை கண்டனான். அதுதான் அவனின் கடிதம் வந்திருக்கு. அவனுடைய அப்பாவும் அம்மாவும் இறந்தபிறகு நான் தான் அவனை வளர்த்தவள். அவனுக்கு சகோதரங்கள் இல்லை. நான் இருக்கிற இந்தக் குடிசை விவசாயியாக இருந்த அவன்டை தகப்பனின் கடும் உழைப்பிலையும், மொஹிடீன் முதலாளியிடம் வட்டிக்கு கடன் வங்கியும் கட்டியவர். அந்தக் கடன் இன்னும் தீர்ந்த பாடாகயில்லை. மாதம் மாதம் 500 ரூபாய் மொஹிடீன் முதலாளிக்கு கொடுத்தாகவேண்டும். அதோடு என் செலவுக்கு மாதம் 500 ரூபாய் அனுப்புவான். இன்னும் மிகுதி காசு 1௦,௦௦௦ரூபாய் முதலாளிக்கு கொடுக்கவேண்டும். அதனால் தான் தேவனின் கடிதத்தையும் காசையும் எதிர்பரர்த்துக் கொண்டு இருந்தனான்” செல்லாட்சி சொன்னாள் ,
“இப்ப விளங்குது ஆச்சி. தேவன் நல்ல பொடியன். கடனை கெதியிலை தீர்த்துபோடுவான். இந்தாருங்கோ லெட்டர்” தங்கராசு கடிதத்தை நீட்டினான்
“உனக்குத் தெரியும் தானே எனக்கு எழுத வாசிக்கத் தெரியாது எண்டு ஒருக்கா நல்லபிள்ளை மாதிரி கடிதத்தை எனக்கு வாசித்துக் காட்டேன்” ஆச்சி கெஞ்சிக் கேட்டாள்.
தங்கராசு என்வலப்பில் இருந்த கடிதத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினான்
“ என்டா தங்ராசு மனிஓடர் தேவன் அனுபவில்லையே” ஆச்சி கேட்டாள்
“ இல்லை ஆச்சி கடிதம் மட்டும் தான் அனுப்பிருக்கிறான்”
“ சரி வாசி கேட்பம்”
அன்புள்ள என் ஆச்சி செல்லம்மாவுக்கு தேவன் எழுதிகொள்வது.
எனக்குத் தெரியும் உனக்கு வாசிக்கத் தெரியாது எண்டு. தங்கராசு நபிக்கையானவன். அவன் கடிதத்தில் உள்ளதை உள்ளபடியே வாசிப்பான். நான் இப்ப கொழும்பிலை உள்ள ஒரு பெரிய கலதாரி ஹோட்டலிலை ரூம் போயாக வேலை செய்கிறேன். மாதம் 2000 சம்பளம். எனது மேனேஜர் ஸ்டீபன் நல்லவர். என்னை அவருக்குப் பிடிக்கும். ஹோட்டலிலை தங்க ஒரு ரூம் தந்திருக்குறார். ஒரு’ அறைக்குள் மூன்று பேர் இருக்கிறோம். சாப்பாடு ஹோட்டல் தருகுது. இப்ப சுற்றுலா பயணிகள் வருவதால் வேலை அதிகம். அதனால் கடிதம் போட சுணங்கி விட்டது. கோபிக்காதே. போன கிழமை ஜேர்மனி., கனடா தேசங்களில் இருந்து வந்த இரு சுற்றுலாப் பயணிகளை நல்லாக கவனித்ததுக்காக ஆளுக்கு இருபது டாலர்கள் தந்தார்கள். அதையும் சேர்த்து பெரிய தொகை என்ற படியால் 5௦௦0 ரூபாய் வவுனியாவில் இருக்கும் ராஜன் மூலம் அனுப்புகிறேன். ஒரு கிழமையில் காசு உனக்கு கிடைக்கும்.
மொஹிடீன் முதலாளிக்கு 40௦௦ ரூபாய் கொடு. கெதியிலை கடனை கட்டி முடித்து போடுவன். நீ ஒண்டுக்கும் யோசிக்காதே.
இன்னொரு நல்ல செய்தி. இங்கை துபாயிலை இருந்து வந்த அரேபியர் ஒருவர் தனது துபாய் ஹோட்டலில் எனக்கு வேலை செய்ய விருப்பமா என்று கேட்டார். நான் ஓம் என்றேன், ஒரு மாதத்திலை விசா அனுப்புவதாக சொல்லி போய் இருகிறார். அந்த உத்தியோகம் கிடைத்தால் முதலாளியின் கடனை கெதியிலை தீர்த்து போடலாம். உன் உடம்பை கவனித்துகொள். தங்கராசுவையும் நான் கேட்டதாகச் சொல். மிகுதி அடுத்த கடிதத்தில்
இப்படிக்கு
உன் பேரன் தேவன்
செல்லம்மா முகத்தில் பூரிப்பை தங்கராசு கண்டான்..
“முருகண்டி பிள்ளையாரே என் பேரனுக்கு நீண்ட ஆயுளைக் கொடும்” என்று சுவரில் தொங்கிய பிள்ளையார் படத்தைப் பார்த்து கும்பிட்டாள்.
“ சரி ஆச்சி உன்னோடு கன நேரம் செலவழித்து போட்டேன் தேவகி டீச்சருக்கு ஒரு கடிதம் இருக்கு கொடுக்க. நான் வாறன்” என்று புறப்பட்டான்.
******
“தபால்காரன்ன தங்கராசாவை இன்னும் வரக்காணோம்;. வழக்கத்திலை சரியாக காலை ஒன்பது மணிக்கு வந்திடுவான். இண்டைக்கு ஏன் இவ்வளவு சுணக்கமோ தெரியவில்லை அம்மா”, இப்படி முணுமுணுத்தபடி ஹாலுக்கும்; வாசலுக்குமாக அடிக்கடி போய்வநது கொண்டிந்தாள் வானதி
வானதியின் தாய் மீனாட்சிக்கு மகளின் அவசரம் ஏன் என்று தெரியும். வானதிக்கு திருமணமாகி ஆறு மாதங்களாகிவிட்டது. கனேடியன் சிட்டிசன் காந்தனை கணவனாக பெற்றது தனக்கு கிடைத்த அதிர்ஷடம் என்று வானதி நினைத்தாள். வானதியின் அக்கா காயத்திரி திருமணமாகி லண்டனுக் போய் நான்கு வருடங்களுக்குப் பின்னரே வானதிக்கும் காந்தனுக்கும் திருமணமாயிற்று. அதுவும் எதிர்பாராதவாறு நடந்த காதல் திருமணம். ஒரு வருஷத்துக்கு முன்பு வானதி நேர்சாக வவுனியா ஆஸ்பத்திரியில் வேலை. செய்தபோது தான் காந்தன் கனடாவில் இருந்து ஒரு மாத லீவில் வவுனியாவுக்கு] வந்திருந்தான். வந்து ஒரு கிழமையில் அவனுக்கு வருத்தம் வந்து வவுனியா ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு போனபோது ஒரு கிழமை. வைத்தியத்துக்கு அங்கு தங்க வேண்டி வந்தது. அப்போது காந்தனுக்கு அந்த வார்டில் வேலை செய்த வானதி; அறிமுகமானாள். அதுவே காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது.
வானதியை தன்னால் வெகுகாலம் பிரிநது இருக்க முடியாது. வெகு விரைவில அவளுக்கு கனடாவுக்கு வர விசா எடுக்க ஒழுங்குகள் செய்து வருவதாக கடிதத்தில் காந்தன் எழுதியிருந்தான். மாதங்கள் ஆறாகியும் விசா கிடைக்கவில்லை எப்போ விசா கிடைக்கும் என்று எதிர்பார்த்தபடியே வானதி காத்து இருந்தாள்
தங்கராசு வானதிக்கு வந்த கடிதத்தோடு அவள் வீடு வாசலுக்கு போன போது.
“தங்கராசு உன்னைத் தான் பார்த்துகொண்டு இருக்கிறேன். எதாவது கனடா முத்திரையோடு கடிதம் எனக்கு இருக்கே”
“ ஓம் இருக்கு தங்கச்சி. ஒரு வெளிநாட்டு கடிதம் மட்டுமே போதியிலை இருக்கு, காந்தனின் கடிதம் தான் அது. இந்தாரும்” கடிதத்தை கொடுத்தான் தங்கராசு
வானதி அவசரமாக கடிதத்தைப் பிரித்து வாசித்தாள். அவள் முகம் பூரிப்பதைக் கண்ட தங்கராசு. “ என்ன தங்கச்சி ஏதும் நல்ல நியூஸ் காந்தன் எழுதியிருகிறாரே”
சிரித்தபடி “ஓம் எனக்கு விசா தருவதாக கனடா அரசு சொல்லியிருக்காம். நான மெடிக்கல் டெஸ்ட்டுக்கு போக வேண்டுமாம். அதோடை கொழும்பு கனேடியன் ஹைகொமிசினுக்கு போகவேண்டுமாம். அவையல் என்னை இன்டர்வியூ செய்வார்கலாம்.” வானதி சொன்னாள்.
“ உமக்கு’ அது பிர்ச்சனை இல்லை உமக்குத் தானே ஆங்கிலம் நல்லாகப் பேச. எழுத வாசிக்கத் தெரியுமே”. சரி பிள்ளை நீர் கனடா போகமுன் நான் உம்மை சந்திக்றேன் தேவகி டீச்சருக்கு ஒரு கடிதம் இருக்கு கொடுக்கவேண்டும். நான் வாறன்” தங்ககரரசு வானதியிடம் விடைபெற்று. சைக்கிலில் ஏறி மிதித்தான்
******.
இப்ப நேரம் 9.30 ஆயிடுச்சு. அத்தான்டை கடிதம் இண்டைக்கு வர வேண்டும். மூன்று நாளைக்கு முந்தியே சம்பளம் எடுத்திருப்பார்.” தேவி முணுமுணுத்தப்டியே வாசலுக்கு வந்தாள் தபால்காரனை எதிர்பார்த்து. அன்று அவள் லீவு.
அதே நேரம் சைக்கில் மணியை அடித்துக் கொண்டு தபால்காகர தங்கராசாவும் வர சரியாக இருந்தது.
தேவியை சிறுவயது முதல் கொண்டு தங்கராசாவுவுக்குத் தெரியும். தேவி படிப்பில் கெட்டிக்காரி என்று ஊரில் பலர் பேசிக் கொண்டனர். அவள் ஏ லேவல் சித்திபெற்று, அதன் பின் ஆசிரியை பயற்சிபெற்று தமிழ் ஆசிரியையாகி உள்ளூர் பள்ளிக்கூடத்தில் வேலை செய்வாள் என்று தங்கராசு எதிர்பார்க்கவில்லை. அவள் தன சொந்த தாய் மாமன் மகன் சிவலிங்கத்தை திருமணம் செய்தபோது திருமணத்துக்கு தங்கரசுவுகும் அழைப்பிதழ் அனுப்ப தேவி மறக்கவில்லை. அழைப்பிதழ் வந்தபோது திருமணத்துக்குப் போகாமல் தங்கரசுவால் இருக்கமுடியவில்லை. கலியாணப் பரிசாக ஒரு சுவர் கடிகாரத்தொடு போனான்
சிவா என்ற சிவலிங்கம் ஒரு அரசாங்க கிளார்க். தேவியை போல் கெட்டிக்காரன். யாழ்ப்பாணம், வவுனியா கச்சேரிகளில் வேலை செய்து. பதவி உயர்வு கிடைத்து’ திருகோணமலை கச்சேரிக்கு மாற்றலாகி சிவா போனான். மாதம் ஒருமுறையாவது கணேஷபுரத்துக்கு வரத் தவறமாட்டான். திருமணமாகி இரு வருடத்தில் தேவகிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. தோற்றத்தில் சரியாக சிவாவைப் போலவே குழந்தை இருந்தது. சிவாவுக்கும் தன மகள் ரேவதி மேல் அளவுகடந்த பிரியம்.
இந்தாருங்கோ டீச்சர் உங்களுக்கு சிவாவிடம் இருந்து கடிதம் வந்திருக்கு தேவியிடம் கடிதத்தைக் கொடுத்தான் தங்கராசு. கடிதத்தை வாங்கி அவசரம் அவசரம்மாகப் பிரித்தாள் தேவகி. கடிதத்துக்குள் 4000 ரூபாயுக்கு மணிஓடர் இருந்தது. கடிதத்தை வாசித்த போது புரமொசனால் சம்பளம் கூடியததால் அரியர்ஸ் பணம் வந்ததாகவும் அதனால் 4000 அனுபுவதாக கடிதத்தில் சிவா எழுதி இருந்தான்.. . .
******
தபால்காரன் தங்கரசு வேலை செய்து சோர்வாக இருந்ததால், செல்லையாவின் தேனீர் கடையில் சற்று இளப்பாறி ஒரு தேனீரோடு வடையும் உண்ணுவது’ வழக்கம். செல்லையா அவனுக்குப் பலகாலம் அறிமுகமானவர். அவர் தனது கடையைப் பெரிதாக்கி பலசரக்கு கடையாக மாற்ற பாங் லோனுக்கு விணப்பிக்க கடிதம் எழுதி கொடுத்தது தங்கராசுவுக்கு நினைவில் இருந்தது. மக்கள் வங்கியில் இருந்து வந்திருந்த கடிதத்தை
செல்லையாவுக்கு கொடுத்தபடியே,
“ செல்லையா உமக்கு வங்கியில் இருந்து நீர் விண்ணப்பித்த லோனுக்கு கடிதம் வந்திருக்கு, இந்தாரும் கடிதம். வாசித்துப் பாரும்”
செல்லையா கடிதத்தை வங்கி வாசித்து முகம் மலர்ந்தார்.
“ என்ன செல்லையா நல்ல செய்தியே வந்திருக்கு”?
“ ஓம். நீர் எழுதி. நான் விண்ணப்பித்த 20,000 ரூபாயுக்கு’ லோன் அனுமதித்து கடிதம் வந்திருக்கு. யாராவது வேலை செய்யும் ஒருவர் உத்தரவாதம் கொடுக்க வேண்டுமாம்”
“ ஒண்டுக்கும் யோசிக்காதையும். அரச சேவையில் உள்ள நான் இருக்கிறேன் உமக்கு உத்தரவாதம் தர” என்றான் தங்கராசு
தங்கராசு உனக்கு பெரிய மனசு. என்றரர் செல்லையா.
தங்கராசு விவசாயி முருகையாவுக்கு வந்திருந்த கடிதத்தை கொடுக்கப் பயணத்தைத் தொடர்ந்தான்.
******
விவசாயி முருகையா கடும் உழைப்பாளி. பத்து ஏக்கர் நிலத்துக்குச் சொந்தக்காரன், ஏர்பிடித்து வியர்வை சிந்த உழுபவன். ஊரே வியக்கும்’ வண்ணம் அவன் காணியில் பயிர் விளைந்தது. பத்து ஏக்காரில் ஒரு பகுதியில் காய்கறிகள் வளர்த்தான். அவன் தோட்டத்து காய்கறிகளுக்கு கிராமத்தில் நல்ல மதிப்பு. தங்கராசு தன் காய்கறிகள் தோட்டத்தைப் பார்த்து ரசித்து கொண்டு நிற்பதைக் கண்ட முருகையா அவனிடம் போனான்.
அவனைக் கண்டதும் “என்ன முருகையா நீ ஏதும் கடிதத்தை எதிர்பார்த்து’ கொண்டு இருக்கிறியே”? தங்கராசா கேட்டான்
“ஒம் தங்கராசு ஏதும் எனக்கு கடிதம் இருக்கே”
“நீ எதிர்பார்த்த மாதிரி உனக்கு வடமாகாண விவசாயஅமைச்சில் இருந்து கடிதம்
வந்திருக்கு நீ ஏதும் கேட்டு எழுதினியா”?
“ ஓம். தேவகி டீச்சர் உதவியோடு ஆறு மாதத்துக்கு முன் எனக்கு உழுவதுக்கு உதவி கேட்டு எழுதினனான். அதுக்கு பதில் வர . மூன்று மாதத்துக்கு முன்பு இரண்டு அதிகாரிகள் வந்து என் காணியின் விளைச்சலை பார்த்து போனவையள்”
“ உன் மனுவுக்கு பதில் வந்திருக்குது. இந்தா கடிதம். என்ன எழுதி இருக்குது என்று வாசி”
முருகையா கடிதத்தை கவரில் இருந்து எடுத்து வாசித்தான்
மதிபுக்குரிய முருகையா அவர்கட்கு வடமாகாண விவசாய அமைச்சு எழுதிகொவது
உமது மனுவை அதிகாரிகள் விசாரித்ததில் நீர் ஒரு கடுமையாக உழைக்கும் விவசாயி என்றும்., உமது காணியில் காய்கறியும், நெல்லும் நனறாக விளைவதாக அறிக்கை சமர்பித்துள்ளார்கள். வடமாகாணத்தில் அதிக விளைச்சல் உள்ள நிலம் உமது நிலம் என்பதை மகிழ்ச்சியோடு அறிவிக்கிறோம்.அதனால் உமது வேலைச் சுமையை குறைப்பதுக்கும், உற்பத்தியை பெருக்கவும், அரசின்’ செலவில் ஒரு உழும் இயந்திரம் (டிராக்டர்) உமக்கத் தரப்படும். இதை இயக்கும் பயற்சிக்கான செலவையும், காப்புறுதியையும் செலவையும், அரசு தரும்’ என்பதை இக்கடிதத்தின் மூலம் அறிவிக்கிறோம்
இப்படிக்கு
வட மாகாண விவசாய அமைச்சர்
“ முருகையா இது உமது உழைப்புக்கு கிடைத்த வெற்றி” என்று பாராட்டிவிட்டு தன் பயணத்தைத் தங்கராசு தொடர்ந்தான்
******
தங்கராசா தான் கொடுக்கவேண்டிய அடுத்த கடித்தை கொடுப்பதுக்காக சுந்தரலிங்கம்’ என்ற வாலிபனைத் தேடி அவன் வீட்டுக்குப் போன போது அவனின் தாய் “தங்கராசு, கொஞ்ச காலம் சுந்தரம் சரியான மனக் கவலையோடு’ இருக்கிறான். பல வேலைகளுக்கு’ விண்ணப்பித்து ஒரு பதிலும் வரவில்லை. அவனுடைய போதாத காலம். சில நேரம் அவன் பிள்ளையார் கோவில் மண்டபத்தில் இருக்கலாம்” என்றாள்
தங்கராசு பிள்ளையார் கொவிலடிக்குப் போனபோது அங்கு உள்ள ஆல மரத்தின் கீழ் சிந்தனையோடு சுந்தரம் இருப்பதைக் கண்டன்
“ என்ன சுந்தரம் யோசனையோடு இருக்கிறாய்”? தங்கராசு கேட்டான்.
“ எதைச் சொல்ல. எனக்கு வாழ்க்கை வெறுத்து விட்டது: வெறுப்போடு சுந்தரம் பதில் சொன்னான்
“ ஏன அப்படி வெறுப்பு]?
“ நான் விண்ணப்பித்த வேலைகளுக்கு பதில் ஒன்றும்’ வரவில்லை”
“ யோசிகாதே சுந்தரம். உனக்கு ஒரு கடிதம் கொண்டு வந்திருகிறேன்./ போலீஸ் டிப்பார்ட்மேண்டில் இருந்து வந்த கடிதம். இதோ கடிதம் பிரித்துப் பார்
சுந்தரம் ஆவலுடன் கடிதத்தை வாங்கி பிரித்து வாசித்த போது’ சந்தோசத்தால் சத்தம்போட்டு “ எனக்கு போலீசில் வேலை கிடைத்து விட்டது” என்று சொல்லி துள்ளிக்குதித்தான்]
“ என்ன வெலை சுந்தரம்”? தங்கராசு’ கேட்டான்
“ போலீஸ் கொன்ஸ்டபிள் வேலை. யாழ்ப்பாணம் போலீஸ் ஸ்தடைனில் வருகிற திங்கள் கிழமை டிரெயினிங்குக்கு என்னை ரிபோர்ட் செய்யட்டாம்””
நல்ல மகிழ்ச்சியான செய்தி. நேர்மையாகவும், திறமையாகவும் இனி வேலை செய் கெதியிலை உனக்கு அடுத்த சார்ஜன்ட் புரமோசன் கிடைக்கும் என்று வாழ்த்தி விட்டு தன் சைக்கிலை நோக்கிப் போனான்.
*****
வாயில் சுருட்டோடு திண்னையில் அமர்ந்திருந்தார் வவுனியா கச்சேரியில் பியோனாக முப்பது வருடங்கள் வேலை செய்து ரிட்டையரான எழுபது வயது ராசையா. அவருக்கு தனித்த வாழ்க்கை. மனைவியை பத்து வருடங்களுக்கு முன் இழந்தவர். முன்கோபி அனால் நேர்மையானவர். தனது தகப்பன் விட்டுச்சென்ற குடிசையில் வாழ்பவர். அவருடைய ஒரே மகனான ஜேயாராசா வவுனியா மத்திய கல்லூரியில் படித்து பின் ன் கப்பல் ஒன்றில் மாலுமியாக வேலை செய்து, பாங்கோக், சிங்கப்பூர் வியாட்நாம். பிலிப்;பைன் போன்ற தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் சென்று,. கேட்ட’ நண்பர்களின் சகவாசத்தால், ஒரே குடியும் கூத்திக்கும் அடிமையானவன். கிராமத்துக்கு தகப்பனை பார்க்க அவன் வருவதில்லை. ஜெயத்தொடு வேலை செய்த வவுனியாவில் வளர்ந்த சிவராசா என்பவன் ராசையாவின் மகன் ஜெயாராசாவுக்கு ஈரலில் புற்ற்றுநோய் முற்றி மகரகம புற்றுநோய் ஆஸ்பத்திரியில் இருப்பதாக ராசையாவுஉக்கு அறிவித்தான். அந்தக் கவலையோடு இருந்த ராசையாவுக்கு, தான் கொண்டுவந்திருந்த கடிதத்தை தங்கராசு கொடுத்தான்.
கடிதத்தைப் பிரித்து வாசித்து ராசையா மௌனமானார்
“ என்ன செய்தி உங்கடை மகனிடம் இருந்து வந்திருக்கிறது ஐயா”? தங்கராசு கேட்டான்
“மகரகம புற்றுநோய் ஆஸ்பத்திரில் இருந்து கடிதம் வந்திருக்கு. எல்லாம் எபபவோ முடிந்து விட்டதாக” எனறார்’ கண்க்ளில் கண்ணீரோடு சொன்னார் ராசையா.
தங்கராசு பேசாமல் அங்கிருந்து மற்ற்றவர்களுக்கு வந்திருந்த கடிதங்களை கொடுக்க தன் பயணத்தை தொடர்ந்தான்.
பயணத்தின் போது அவன் சிந்தித்தான் நான் கொண்டுவரும் கடிதம் ஊர் மக்களுக்கு கொடுக்கும் போது சிலர் சந்தோசத்தில் முகம் மலர்வார்கள். சிலர் ஒன்றுமே பேசமாட்டார்கள். இன்னும் சிலர் கடிதத்தை வாசித்து விட்டு கண்ணீர் விடுவார்கள். இதுதான் மனித வாழ்க்கை. ஒரு தபால்கரன் கொண்டு வரும் செய்திகள் அப்படியானவை.
******
.