நீ எளியவன் குரலையும் கேள்
ஒவ்வொரு மனிதனுக்கும்
சமுதாய சிந்தனை துளிர்விடவேண்டும்
அந்த நிழலில் சமூகம்
அமைதியாக ஓய்வு
எடுக்க வேண்டும்..
அநீதியை புறந்தள்ளி போராடவேண்டும்
அரசானாலும் அவனை
அடக்கவேண்டும்
நல்லதை நிலை நாட்ட
ஒன்று பட வேண்டும்..
ஆளுக்கொரு சங்கம் வைத்து
அவனவன் பெருமை பேசாமல்
இருக்க வேண்டும்
எளியவனை எடுத்தெரியாத குணம்
வேண்டும்..
நான்கு சுவற்றுக்குள் பெருமை பேசுபவதை விட வேண்டும்
சாதிக்கொரு சங்கம் போய் ஆளுக்கொரு சங்கம் வந்துவிட்டதே!!
வீதியில் போராடும் மனிதனோடு இணைய வேண்டும்...
சமுதாய இன்னல் போக்க களம் இறங்க வேண்டும்
களத்தில் கடைசி வரை போராட வேண்டும்
போராட்டத்தில் உறங்கும் வெற்றியை தட்டி எழுப்ப வேண்டும்
நன்மையை பிறர் சுவைக்க வேண்டும்
சமுதாய மாற்றம் எனும் தீயை வைக்கவேண்டும்..
அரசனுக்குள்ளே ஒற்றுமை வேண்டும்
நாமும் இந்தியன் என்பதை நினைவில் வைக்க வேண்டும்
மாநிலம் மொழியில் வேற்றுமை காணத நிலை வேண்டும்
அது போல இந்தியனாய் இணைய வேண்டும்
இருமன்னன் அடித்து கொண்டான் அன்று மண்ணுக்காக
தாய் நாட்டில் திருடிவிட்டு
மறைக்க நினைக்கிறான் இன்று பொருளுக்காக!
அரசனே பொருளுக்கான போராட்டம் விடு
மக்களுக்காக போராட்டம் எடு..
வலியவனான நீ எளியவன் குரலையும் கேள்!