உனக்கு ஒரு தாயாகி

ஓர் துளியில்
எனக்காக ஓர் உயிர்
தந்தவள் நீ.....

உனூ உறக்கம் இன்றி
உன் பொழுது கழிய
என் முன்பாக மட்டும்
எப்பொழுதும்
புன்னகைத்தவளாகவே.....

ஆண்களுக்கு தோள்
மீது சுமக்க வரம் தந்தவன்
வயிற்றில் சுமக்க தரவில்லையே.....

அப்படி ஒரு வரம்
இருந்திருக்குமானால்
முதியோர் இல்லங்களும்
இல்லாது போயிருக்குமோ......

வார்த்தைகளில் சொல்லி விட
முடியாத இன்பம் கலந்த ஒரு
துன்பம் இருக்குமானால்
உன் உயிரில் இருந்து
இன்னொரு உயிர் தரும்
அந்த தருணம் மட்டுமே.....

என் பிள்ளையை உன்
மார்பில் சுமக்க
உன்னை என்றென்றும்
என் இதயத்தில் சுமப்பேன்
உனக்கு இன்னொரு
தாயாக........

****!!!!!*** Samsu ***!!!!!!*****

எழுதியவர் : Samsu (7-Jun-17, 4:26 am)
சேர்த்தது : சம்சுதீன்
Tanglish : unaku oru thaayaagi
பார்வை : 492

மேலே