வேண்டாம் வேகம்

குடும்ப மெல்லாம் கூடயேற்றி
காற்றைப் போல பறப்பவரே,
குடும்பம் காத்திடும் முறையிதுவா
கூடுதல் வேகம் முறையாமோ,
தடுக்கும் கவச மணிந்தாலும்
தாண்டும் வேகம் இடர்தானே,
அடுக்கும் உறவுகள் நலங்காக்க
அதிக வேகம் வேண்டாமே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (7-Jun-17, 7:02 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : ventaam vegam
பார்வை : 115

மேலே