சிறகு விரித்து
இதழ் விரிப்புக்கு என்ன பஞ்சமோ !
இல்லை கனவுகள் தான் வான் மிஞ்சுமோ !
அறைக்குள் அகில் அடைத்த நினைவுகள் தான் மீளுமோ !
கூட்டான் சோற்றில் விருந்து கடந்த களிப்பு தான் நீங்குமோ !
இனம் குலம் மறந்த குழந்தை மனம் தான் என் வசம் ஆகுமோ !
கலக்கமில்லா மனமும் கபடமில்லா முகமும் ஓடித் தான் வருமோ !
ஓடிச் சென்ற நாட்களும் முத்துக்கள் ஆகுமோ !
ஈசன் அவன் என் வசம் நின்றால்
கரை இல்லா மகனாய் ! வண்ண கோலம் பூண்ட !
மாணாக்கனாய் யாசிக்கவோ !