கம்ம கம்ம கம்மா

என்னங்க பாட்டிம்மா, இந்திப் பாட்டெல்லாம் பாடறீங்க?
😊😊😊😊😊😊😊
ஏண்டி செந்தாமரை, பாட்டுப் பாடற வயசா எனக்கு. எம் பேர நடராசன் அவம் பேர நட்டுராசுன்னு மாத்திட்டான். அவம் பொண்ண கம்ம கம்ம கம்மா-ன்னுதான் கூப்படச் சொல்லறான்.
😊😊😊😊😊
பாட்டிம்மா நடராஜன் அண்ணன் அவரு பேர நட்ராஜ் -ன்னு மாத்திட்டாரு. ஹம்ம ஹம்ம ஹம்மா -ன்னு ஒரு சினிமா பாட்டு இருக்குது. அந்தப் பாட்டு ரொம்ப பிடிக்கும். அத அடிக்கடி அவரு பாடுவாரு. அவரு பாப்பாவக் கொஞ்சறபோது அந்தப் பாட்ட பாடுவாரு. பாப்பா பேரு ஹம்மா.
😊😊😊😊😊
என்னது கம்மா-வா? நல்லா இருக்குதடி பிள்ளைங்களுக்குப் பேரு வைக்கற லட்சணம். கம்மாவாம் கம்மா. கம்ம கம்ம கம்மா. சே....பேரப் பாரு, பேர.....
😊😊😊😊😊😊
இதாம் பாட்டிம்மா இந்தக் காலத்து தமிழர்களோட நாகரீகம்.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
சிரிக்க அல்ல. சிந்திக்க.
@@@@@@@@@@@@@@@@@@@@@
Hamma (Adj) = pure, like pearl, praiseworthy, thankful ( Arabian, Indian origin) indiachildnamescom

எழுதியவர் : மலர் (10-Jun-17, 7:36 pm)
பார்வை : 172

சிறந்த நகைச்சுவைகள்

மேலே