பிரிவுடன்

மாற்றம் எனும் நாளுக்கு
வழிவிட்டே ஆக வேண்டும்...
கூடவே இருக்கும் உறவு கூட
கூடியே வருவதில்லை ......
பிரியும் போது உதிரும்
கண்ணீரில் வலிகள் வழியும் கூட.....
என் வலது கையும் இடது கையும்
பிரிந்த போது உணர்ச்சி ஏதுமில்லை....
அவன் கை கோர்த்து நடந்த பாதையில்
வெறும் கை வீசி நடக்கையில்
ஒரு பக்க கைகள் இல்லை.....
என் பேச்சே இடைமறிக்க
செவிகள் அருகே இல்லை
காற்றுக்கோ காது இல்லை......
நேத்து கூட நினைக்கவில்லை
இன்று பிரிவு தந்தாய்...
இரவே இடையே நீ ஏன் வந்தாய்....
போவோமா......
எனும் வார்த்தைக்கு
முற்று இல்லை என்றல்லவா...
போய்கிறேன் என்று சொல்லி
முற்று வைத்தாய் !!!
பிரிவுடன் நீ சொன்ன வார்தைக்கு
பிரியமுடன் ஏற்க என்னிடம் தெம்பில்லை..
கண்ணீர் கிளையுடன்
கன்னத்தில் வரைந்த கோடுகள்
கையசைக்குது போய் வா.....

எழுதியவர் : (11-Jun-17, 9:37 am)
சேர்த்தது : குருமுருகன்
பார்வை : 78

மேலே