பதுமைகளின் கண்ணீர்

ஈரமில்லாதவனே சற்று நில்
வெட்டி வீழ்த்தினால் கேட்க
யார் இருக்கிறார்கள் என்ற தைரியமா - அல்ல எங்களால்
நகர்ந்தோ பறந்தோ ஊர்ந்தோ
போகமுடியாது என்ற ஏளனமா...?
பறந்தும் நகர்ந்தும் ஊர்ந்தும்
போவதையே விட்டுவைக்கவில்லை
நாங்கள் எம்மாத்திரம்..

அடேய் மனிதா உன் மனதை
தொட்டு சொல் உன் வாழ்நாளில்
எங்களைப்போல் எத்தனை பேரை
நீ வளர்த்து விட்டிருக்கிறாய்
எத்தனை இளந்தளிர்களுக்கு தண்ணீர் ஊற்றி வளர்த்திருக்கிறாய்
தண்ணீர் ஊற்றிய காலங்களைவிட
கண்ணீர் வரவழைத்த காலங்களே
அதிகம்...

நாங்கள் இல்லாத உலகையும்
அடுத்து வரும் உன்
சந்ததியினரையும் யோசித்து
பார்த்தாயா உங்களின் சுயநலத்திற்கு நாங்கள் பலிகடாவா...?
எங்களின் பிள்ளைகளை
வளர்த்து
உங்களின் பிள்ளைகளை காப்பாற்றிக்கொள்...

எழுதியவர் : செல்வமுத்து.M (12-Jun-17, 9:43 am)
பார்வை : 105

மேலே