சடைச்சி இடைச்சி கலைச்சி
சடையனை மணந்த சடைச்சி பார்வதி
இடையனை மணந்த இடைச்சி இலக்குமி
படைப்புத் தொழிலான் கலைச்சி வாணி
கடைவிழி காட்டி அருளதந் திடுவீரே
நிலை மண்டில ஆசிரியப்பா
சடையன் மனைவி சடைச்சி உமையாள்
இடையன் மனைவி இடைச்சிஸ்ரீ தேவி
படைப்போன் மனைவி கலைச்சியாம் வாணி
கடைவிழி காட்டிடுவீ ரே
ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
---கவின் சாரலன்