உழைப்பு

கால்கள் ஓட தூரங்கள் கடந்துவிடும்,
காலங்கள் ஓட துயரங்கள் மாறிவிடும்,
மனம் மாற துன்பங்கள் நீங்கி விடும்,
குணம் கூட பெருமை தேடி வரும்.

நினைப்பெல்லாம் உழைப்பென்றால்,
உயர்வு உன்னை நாடி வரும்.
உண்மையே உன் வழியென்றால்,
உயர்வே உன் மொழியாகும் .

உதவிக்கு நீ கரம் நீட்ட,
மனதினில் நம்மதி கூடும்.
மனம் நினைக்க உடன் கொடுப்பது,
உன்னதப் பண்பாகும்.

இருப்பதில் கொடுப்பதே இன்பம்,
இல்லாதவர் பெறுவதே தர்மம்.
இல்லை என்பது இல்லாமல் போவது,
மண்ணின் உயர்வாகும்.

எழுதியவர் : arsm1952 (13-Jun-17, 8:19 pm)
சேர்த்தது : arsm1952
Tanglish : ulaippu
பார்வை : 1837

மேலே