நெனப்போட நிப்பவ - காதலாரா
நெனப்போட நிப்பவ...
~~~~~~~~~~~~~~~
ஒழக்க புடிச்சி
நெல்ல பிரிச்சவ..
கணக்கா வடிச்சி
புள்ள வளத்தவ...
புளி நசுக்கி..
பொடவ வாங்கி
பேத்திக்குப் போத்தி
ஒறவக் காத்தவ...
வெத்தலத் துப்பிய
வேக்காட்டு தடத்துல..
கதையாக் கொட்டும்
தொணையா நடந்தவ...
கரும்பு சோக
குடுசைக்கு தோக..
நிலா வந்து போக
கூர குட்டி வானமாக..
உடும்பு சிரிப்பு
காத்தோட கலக்க...
அடுப்பு நெருப்பும்
சோத்தோட மணக்கும்..
நெத்தி சாம்பல
சொத்தா நெனச்சவள
பெத்த ஆம்பள எவனும்
செத்தும் விரும்புல...
- காதலாரா.